ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை -கடுமையாக சாடும் ட்ரம்ப்
28 ஐப்பசி 2025 செவ்வாய் 11:04 | பார்வைகள் : 248
ரஷ்யாவின் அணுசக்தி ஏவுகணை சோதனை தேவையில்லாதது. இதற்கு பதிலாக போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடுமையாக சாடியுள்ளார்.
இது குறித்து நிருபர்களிடம் ட்ரம்ப் கூறியதாவது,
அவர்கள் எங்களுடன் மோதுவதில்லை. நாங்கள் அவர்களுடன் சண்டையிடுவதில்லை. நாங்கள் ஏவுகணை சோதனை நடத்தி வருகிறோம். புட்டினும் அணுசக்தி ஏவுகணை சோதனை நடத்துவது தேவையில்லாதது.
இது பொருத்தமானதாக இருக்கும் என்று நான் நினைக்கவில்லை. சொல்லப்போனால் அவர் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
ஒரு வாரத்தில் முடிய வேண்டிய போர், தற்போது நான்காவது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது. ஏவுகணையை சோதிப்பதற்கு பதிலாக போரை புட்டின் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan