Paristamil Navigation Paristamil advert login

புகலிடக் கோரிக்கையாளர்கள் இராணுவ முகாம்களுக்கு மாற்றம்- பிரித்தானிய அரசின் புதிய திட்டம்

புகலிடக் கோரிக்கையாளர்கள் இராணுவ முகாம்களுக்கு மாற்றம்- பிரித்தானிய அரசின் புதிய திட்டம்

28 ஐப்பசி 2025 செவ்வாய் 13:04 | பார்வைகள் : 292


புகலிட கோரிக்கையாளர்களை இராணுவ முகாம்களுக்கு மாற்ற பிரித்தானிய அரசு திட்டமிட்டு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

பிரித்தானியாவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் புகலிடக் கோரிக்கையாளர்களை ஹோட்டலில் தங்க வைக்கும் நடைமுறைக்கு நாடு முழுவதும் கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.

இந்நிலையில் நூற்றுக்கணக்கான புகலிடக் கோரிக்கையாளர்களை இராணுவ முகாம்களில் மாற்ற இருப்பதாக உள்துறை அலுவலகம் தெரிவித்துள்ளது.


இந்த உத்தரவின் படி, கிட்டத்தட்ட 900 ஆண் புகலிடக் கோரிக்கையாளர்கள் தற்காலிகமாக இரண்டு ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட உள்ளனர்.

அவை, இன்வெர்னஸில் உள்ள கேமரன் பாராக்ஸ்(Cameron Barracks) மற்றும் கிழக்கு சசெக்ஸில் உள்ள கிரோபோரோ பயிற்சி முகாம் என்று தெரியவந்துள்ளது.

மேலும் புகலிடக் கோரிக்கையாளர்கள் இராணுவ முகாம்கள் தவிர தொழிற்சாலை வளாகங்கள், பயன்பாட்டில் இல்லாத தங்குமிடங்கள் ஆகியவற்றிலும் இடம் மாற்ற அதிகாரிகள் தீவிரமாக ஆலோசித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்