Paristamil Navigation Paristamil advert login

1150 அடி உயரத்தில் கால்பந்து போட்டி - 2034ல் உலகிற்கு காத்திருக்கும் அதிசயம்

1150 அடி உயரத்தில் கால்பந்து போட்டி - 2034ல் உலகிற்கு காத்திருக்கும் அதிசயம்

28 ஐப்பசி 2025 செவ்வாய் 14:04 | பார்வைகள் : 117


48 அணிகள் பங்கேற்கும் 23 ஆவது உலகக் கிண்ணக் கால்பந்து போட்டி அடுத்த ஆண்டு ஜூன், ஜூலை மாதங்களில் கனடா, மெக்சிகோ, அமெரிக்கா ஆகிய நாடுகளில் நடைபெறுகிறது. இதனையடுத்து அடுத்த உலக கிண்ணத் தொடர் 2034 இல் நடைபெற உள்ளது.

இந்த போட்டியின் போது பயன்படுத்தப்படும் 15 மைதானங்களில் சவுதி அரேபியாவில் உள்ள நியோம் மைதானமும் ஒன்றாகும்.

இது ஸ்கை அரங்கம் என்றும் அழைக்கப்படுகிறது. இதன்மூலம் உலகின் முதல் ஸ்கை அரங்கத்தை சவுதி அரேபியா அறிமுகப்படுத்துகிறது.

இந்த அரங்கம் தளத்திலிருந்து 1150 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது. மேலும் இது 46,000 பார்வையாளர்கள் வரை இருக்கும் வகையில் கட்டப்படுகிறது.

இதன் கட்டுமானப் பணிகள் 2027 இல் தொடங்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் உலகக் கிண்ணத்துக்கு இரண்டு ஆண்டுகளுக்கு முன்னதாக 2032 ஆம் ஆண்டுக்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அரங்கம் தொடர்பான திட்டம் குறித்த காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்