`இன்சுலின் பென்` - ஒரு அறிமுகம்..!!
15 ஆனி 2020 திங்கள் 15:38 | பார்வைகள் : 9300
நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு இன்சுலின் பாவனையை மருத்துவர்கள் பரிந்துரைப்பதை நீங்கள் அறிவீர்கள். இன்சுலினால் பல ஆபத்துக்களும் உண்டு.
நீரிழிவு நோய் உள்ளவர்கள், தங்கள் உடல்நிலைக்கு ஏற்றால் போல் இன்சுலின் அளவை பயன்படுத்தவேண்டும். அதிகமாகவோ, அல்லது குறைவாகவோ பயன்படுத்தும் போது அது ஆபத்தானதாக மாறிவிடும்.
சிலர் இன்சுலின் போட்டுக்கொண்டதை மறந்து இரண்டு தடவைகள் போட்டுக்கொள்கின்றனர். இதனால் இன்சுலின் அதிகரித்து கோமா நிலைக்கும் தள்ளி விடும்.
மருத்துவர்கள் இன்சுலில் அளவை 10 மி.லி அல்லது 20 மி.லி என நோயாளர்களின் தேவை கருதி அவர்களின் `சுகர்` அளவை அறிந்து பரிந்துரைப்பார்கள்.
அளவு மீறி எடுத்துக்கொள்வதற்கான ஆபத்தை உணர்ந்து தான் இந்த அளவு நிர்ணயிக்கப்படுகின்றது.
****
சரி.. இந்த இன்சுலின் ஒவ்வொருவர் உடலுக்கும் ஒவ்வொரு நாளுக்கும் மாறுபடுகின்றது.
இன்று 10 மி.லி என்றால்.. நாளை 15 மி.லி தேவைப்படுகின்றது. நாளை மறுநாள் 5 மி.லிட்டரே போதுமானதாக இருக்கின்றது.
இந்த குழப்பத்தை சரிசெய்யவே வந்துள்ளது இந்த இன்சுலின் பென்.
தினமும் வீட்டில் சீனியின் அளவை சோதனையிடுவது போல், இன்சுலின் தேவையின் அளவையும் அறிந்துகொண்டு அதற்கேற்றால் போல் இன்சுலினை போட்டுக்கொள்ளலாம்.
****
இந்த இன்சுலின் கருவியை நீங்கள் வாகியவுடன், உங்கள் கருவிக்கென வடிவமைக்கப்பட்ட மொபைல் செயலியை நிறுவிக்கொள்ளவேண்டும். அதன் பின்னர் உங்கள் குறித்த தரவுகளை பதிவு செய்துகொள்ளவேண்டும்.
அடிப்படை அவ்வளது தான். இப்போது இந்த கருவி மூலம் நீங்கள் உங்கள் கையில், தொடையில் அல்லது வயிற்றுப்பகுதியில் நீங்கள் இன்சுலின் ஊசியை குத்தினால் போதும்.. உங்கள் உடலுக்கு தேவையானவற்றை அளந்து உங்கள் திரையில் காண்பிக்கும். அப்படியே இன்சுலினை போட்டுக்கொள்ள வேண்டியது தான்.
****
இதனால் ஏற்படும் நன்மைகள்..
• உங்கள் உடலுக்கு இன்சுலின் தேவையா என்பதை நீங்கள் முதலில் தெரிந்துகொள்ளலாம்.
• நீங்கள் இன்சுலின் போட்டதை மறந்துவிட்டீர்கள் என்றால், மீண்டும் போட்டுக்கொள்ள வேண்டிய தேவையை தவிர்த்துக்கொள்ளலாம்.
• அதிக அளவுடைய இன்சுலினை போட்டுக்கொள்ளவதால் ஏற்படும் பக்க விளைவுகளை தவிர்த்துக்கொள்ளலாம்.
• மிக குறைந்த விலையில் கிடைப்பதால் அனைவருக்கும் ஏற்ற ஒன்று.
• இதனை இயக்குவதும், பயன்படுத்துவதும் மிக எளிமை என்பதால் முதியோர்களும் இலகுவாக பயன்படுத்தலாம்.
• ஒவ்வொரு மாதமும் உங்கள் செயலி ஊடாக `மாதாந்த அறிக்கையினை` பெற்றுக்கொள்ளலாம். (பிற்பாடு அதை மருத்துவர்களிடம் காண்பித்து ஆலோசனை பெறலாம்.
இப்படி எண்ணற்ற பயன்பாடுகள் கொண்டுள்ளதால் இந்த இன்சுலின் பென்கள் அமோக விற்பனையில் உள்ளன.