பிரிஜிட் மக்ரோனை எதிர்த்து இணையத் துன்புறுத்தல் வழக்கில் 9 பேருக்கு சிறைத்தண்டனை கோரிக்கை!!
28 ஐப்பசி 2025 செவ்வாய் 21:55 | பார்வைகள் : 597
ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோனின் மனைவி பிரிஜிட் மக்ரோனை எதிர்த்து இணையத்தில் பரவிய திருநங்கை எனக் கூறும் போலியான தகவலைப் பரப்பியதாக குற்றம் சாட்டப்பட்ட 10 பேரில் 9 பேருக்கு, மூன்று முதல் பன்னிரண்டு மாதங்கள் வரை நிலுவை சிறைத் தண்டனை கோரப்பட்டுள்ளது.
முக்கிய குற்றவாளியாகக் கருதப்படும் ஆர்லியன் பொயர்சோன்-அட்லான் (Aurélien Poirson-Atlan) அதாவது சோயி சாகன் (Zoé Sagan) என்ற பெயரில் அறியப்படுபவருக்கு 12 மாதங்கள் நிலுவைச்சிறை, 8,000 யூரோ அபராதம் மற்றும் சமூக வலைதள கணக்குகளை ஆறு மாதங்களுக்கு இடைநிறுத்தும் தண்டனை கோரப்பட்டுள்ளது.
மற்ற இரண்டு முக்கிய "தூண்டிவிடுபவர்கள்" எனக் குற்றம் சாட்டப்பட்ட டெல்பின் எஸ். (Delphine S.) மற்றும் பெர்ட்ரான் எஸ். (Bertrand S.) ஆகியோருக்கு ஆறு மாதங்கள் நிலுவைச்சிறை மற்றும் அபராதங்கள் கோரப்பட்டுள்ளன. மற்றும் "பின்தொடர்பவர்கள்"க்கு நான்கு மாதங்கள் நிலுவைச்சிறை அல்லது சமூகப் பணி தண்டனைகள் கோரப்பட்டுள்ளன. வழக்கு செவ்வாய்க்கிழமை இரவு பாதுகாப்பு தரப்பின் வாதங்களுடன் தொடர்கிறது.


























Bons Plans
Annuaire
Scan