பெரும் நிறுவனங்களை குறிவைக்கும் taxe Gafam! - இரண்டு மடங்காக அதிகரிப்பு!!
29 ஐப்பசி 2025 புதன் 07:00 | பார்வைகள் : 741
பிரான்சில் இயங்கும் பெரும் தொழில்நுட்ப நிறுவனங்கள் மீது விதிக்கப்படும் taxe Gafam எனப்படும் டிஜிட்டல் வரி, இரண்டு மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது.
அதற்குரிய வாக்கெடுப்பு நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. இந்த வாக்கெடுப்பில் ஆதரவாக 296 வாக்குகளும், எதிராக 58 வாக்குகளும் பதிவாகின. இதனால் இந்த வரி அதிகரிப்பு நடைமுறைக்கு கொண்டுவரப்பட உள்ளது.
தற்போது 3% சதவீதமாக உள்ள இந்த வரி, இரண்டுமடங்கில் 6% சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அவர்களின் வர்த்தகப்போரினால் பாதிக்கப்பட்ட பிரான்ஸ், இந்த முடிவை எடுத்துள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


























Bons Plans
Annuaire
Scan