வண்ணங்களில் உணவு உண்டால் கேன்சருக்கு சொல்லலாம் குட் பை!!
13 ஆனி 2020 சனி 13:30 | பார்வைகள் : 9003
புற்று நோய் உலகம் முழுவதும் பெரும் தாக்கம் விளைவிக்கும் ஒரு கொடிய நோய். ஆனால் அதை வரவிடாமல் தடுப்பது ஒன்றும் சிரமான காரியம் இல்லை.
உலகம் முழுவதும் புற்று நோய்க்கு எதிராக ஆராய்ச்சிகள் இடம்பெற்றுக்கொண்டு தான் உள்ளன. அமெரிக்கன் புற்றுநோயியல் அமைப்பு (American Cancer Society ) தற்போது புதிய ஆய்வு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதன்படி, `வண்ணங்களில் உணவு உண்டால், புற்று நோயை விரட்டிடலாம்` என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதென்ன வண்ண உணவுகள்..??!
அதாவது உங்கள் உணவுத்தட்டில் சோறு ஒரு புறம் இருக்க, மீதமான கறிகள் எல்லாம் வண்ணங்களில் இருக்கவேண்டும். சிவப்பு பீட்ரூட், செம்மஞ்சள் கேரட், பச்சை கீரை, சிவப்பு தக்காளி என இந்த உணவுகள் பல வண்ணங்களில் இருக்காவேண்டுமாம்.
அதேவேளை, பழங்களும் வண்ணங்களில் இருக்கவேண்டுமாம். மாதுளம் பழம், ஒரேஞ்ச் போன்ற கலர் கலரான உணவுகளை உண்ணவேண்டுமாம்.
அச்சச்சோ... அப்படியென்றால் இறைச்சி வகைகள் உண்ணக்கூடாதா?? என நீங்கள் கேட்பது புரிகின்றது.
தாராளமாக உண்ணலாம்.. ஆனால் இறைச்சியை நன்கு வேகவைத்து, அதில் ஒரு துளிகூட பச்சைத் தன்மை இல்லாத போது தான் சாப்பிட வேண்டுமாம்.
முக்கிய குறிப்பு : இவை அனைத்தும் கேன்சர் வராமல் தடுப்பதற்கு தான். கேன்சர் வந்த பிற்பாடு மருத்துவர்களின் அறிவுரைப்படி தான் உணவுகளை எடுத்துக்கொள்ளவேண்டும்.
மேலும் சில முக்கிய குறிப்பு : நாள் ஒன்றுக்கு உடற்பயிற்சியுடன் கூடிய 30 நிமிட நடை, மது பாவனையை குறைத்தல் போன்றவையும் கட்டாயம் உங்களை கேன்சரில் இருந்து பாதுகாக்கும்.
ஆகவே மக்களே, வண்ணங்களில் உணவு உண்டு வளமாய் வாழ வாழ்த்துகிறோம்.