இனி ChatGPT Go 1 வருடத்திற்கு இலவசம் - இந்தியர்களுக்கு நற்செய்தி..
29 ஐப்பசி 2025 புதன் 08:03 | பார்வைகள் : 145
இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் ChatGPT Go-வை ஒரு முழு வருடத்திற்கு இலவசமாகக் கிடைக்கச் செய்கிறது OpenAI.
நவம்பர் 4 ஆம் திகதி தொடங்கும் வரையறுக்கப்பட்ட கால விளம்பர காலத்தில் பதிவு செய்யும் இந்திய பயனர்களுக்கு 'ChatGPT Go' ஐ ஒரு வருடத்திற்கு இலவசமாக வழங்குவதாக OpenAI அறிவித்துள்ளது.
ChatGPT Go ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டது. OpenAI இன் படி, ChatGPT இன் மிகவும் மேம்பட்ட அம்சங்களை மிகவும் மலிவு விலையில் அணுகக் கோரும் பயனர்களின் கருத்துக்களுக்கு பதிலளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ChatGPT Go இந்தியாவில் பயனர்களுக்கு அதிகரித்த செய்தி வரம்புகள், பட உருவாக்கம் மற்றும் கோப்பு பதிவேற்றங்களை வழங்குகிறது. தற்போது, இதற்கு மாதம் ரூ.399 செலவாகிறதாம்.
இந்நிலையில் தான் நவம்பர் 4 ஆம் தேதி பெங்களூருவில் நடைபெறும் OpenAI இன் DevDay Exchange நிகழ்வை கொண்டாடும் வகையில் இந்தியாவில் உள்ள அனைத்து பயனர்களுக்கும் OpenAI ChatGPT Go-வை ஒரு முழு வருடத்திற்கு இலவசமாகக் கிடைக்கச் செய்கிறது OpenAI.
இது அறிமுகப்படுத்தப்பட்ட முதல் மாதத்திலேயே ChatGPT சந்தாதாரர்களின் எண்ணிக்கை இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும், ChatGPT Go-வை உலகளவில் கிட்டத்தட்ட 90 சந்தைகளுக்கு விரிவுபடுத்தியுள்ளது OpenAI.
இந்தியாவில் மில்லியன் கணக்கானவர்கள் ChatGPT-ஐ தினமும் பயன்படுத்துகின்றனர், இதில் OpenAI-யின் மேம்பட்ட கருவிகளைப் பயன்படுத்தும் டெவலப்பர்கள், மாணவர்கள் மற்றும் நிபுணர்களின் வேகமாக வளர்ந்து வரும் சமூகமும் அடங்கும்.


























Bons Plans
Annuaire
Scan