Paristamil Navigation Paristamil advert login

ரஜினி சினிமாவை விட்டு விலகுகிறாரா ?

ரஜினி சினிமாவை விட்டு விலகுகிறாரா ?

29 ஐப்பசி 2025 புதன் 11:03 | பார்வைகள் : 194


தமிழ் சினிமாவில் எந்த வித பின்புலமும் இன்றி சுயம்பாக சாதித்தவர் ரஜினிகாந்த். சாதாரண பஸ் கண்டக்டராக பணியாற்றி வந்த ரஜினிகாந்த், இன்று இந்திய சினிமாவே வியந்து பார்க்கும் சூப்பர்ஸ்டாராக உயர்ந்திருக்கிறார் என்றால் அதற்கு அவரின் உழைப்பு தான் காரணம். சினிமாவில் நடிகனாக 50 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள ரஜினிகாந்துக்கு தற்போது 74 வயது ஆகிறது. இந்த வயதிலும் சுறுசுறுப்பாக இயங்கி வரும் அவர், செம டிமாண்ட் உள்ள நடிகராகவும் திகழ்ந்து வருகிறார். அவரின் கால்ஷீட்டுக்காக தயாரிப்பாளர்கள் க்யூவில் நிற்கிறார்கள். ஆனால் ரஜினிகாந்த் ஒரு அதிரடி முடிவை எடுத்துள்ளார்.

அது என்னவென்றால், அவர் சினிமாவை விட்டு விலக முடிவு செய்துள்ளாராம். வயதாகிக் கொண்டே போவதால் நடிப்புக்கு ரெஸ்ட் விட்டு, நிம்மதியாக ஓய்வெடுக்க உள்ளாராம் ரஜினி. தற்போது ரஜினிகாந்த் நடிப்பில் ஜெயிலர் 2 திரைப்படம் உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை நெல்சன் திலீப்குமார் இயக்கி வருகிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்தில் ரஜினியுடன் ஷிவ ராஜ்குமார், மோகன்லால், பகத் பாசில் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்து வருகிறது. இப்படத்தை அடுத்த ஆண்டு ஜூன் மாதம் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

இதையடுத்து சுந்தர் சி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளாராம் ரஜினி. அப்படம் பக்கா ஃபேமிலி எண்டர்டெயினராக உருவாக உள்ளதாம். ஜெயிலர் 2 படத்தின் ஷூட்டிங்கை முடித்த கையோடு, சுந்தர் சி இயக்கத்தில் நடிக்க உள்ளாராம் ரஜினி. அப்படத்தை கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தின் மூலம் ரஜினியும் சுந்தர் சி-யும் சுமார் 28 ஆண்டுகளுக்கு பின்னர் மீண்டும் இணைய உள்ளனர். இவர்கள் கூட்டணியில் இதற்கு முன்னர் அருணாச்சலம் என்கிற மாஸ்டர் பீஸ் திரைப்படம் வெளியானது.

ஜெயிலர் 2, சுந்தர் சி இயக்கும் படம் ஆகியவற்றை முடித்த பின்னர் கமல்ஹாசனுடன் இணைய உள்ளார் ரஜினிகாந்த். அப்படம் தான் ரஜினியின் கடைசி படமாக இருக்க வாய்ப்பு உள்ளதாம். அப்படத்தோடு சினிமாவை விட்டு விலக முடிவெடுத்துள்ளாராம். அப்படத்தை கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ், இன்பநிதியின் ரெட் ஜெயண்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்க உள்ளதாம். அப்படத்தை முதலில் லோகேஷ் கனகராஜ் இயக்குவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது நெல்சனுக்கு அந்த வாய்ப்பு சென்றுள்ளதாம். இப்படத்தின் படப்பிடிப்பு 2027-ம் ஆண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வர்த்தக‌ விளம்பரங்கள்