ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் ஆரோக்கிய நன்மைகள் பற்றி தெரியுமா ?
29 ஐப்பசி 2025 புதன் 12:03 | பார்வைகள் : 252
ஓட்ஸ் என்பது ஆரோக்கியமான காலை உணவுகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது. அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள், நார்ச்சத்து மற்றும் ஆன்டி-ஆக்சிடன்ட்கள் நிறைந்த ஓட்ஸ் நீடித்த ஆற்றல், சிறந்த செரிமானம் மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்திற்கு நன்மை பயக்கக்கூடியதாக இருக்கிறது. ஓட்மீல் முதல் ஸ்மூத்திகள் அல்லது ஓவர்நைட் ஓட்ஸ் வரை பல்வேறு வழிகளில் இந்த தானியத்தை நம்முடைய காலை உணவாக எடுத்துக்கொண்டு ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். எனவே தினசரி காலை உணவாக ஓட்ஸ் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் சிலவற்றைப் பற்றிப் பார்க்கலாம்.
இதில் கரையும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் நீண்ட நேரத்திற்கு வயிறு நிரம்பிய உணர்வை கொடுக்கிறது. காலையில் ஓட்ஸ் சாப்பிடுவதால் பசி கட்டுப்படுத்தப்பட்டு, ஆரோக்கியமற்ற நொறுக்கு தீனிகள் சாப்பிடுவது தடுக்கப்படுகிறது.
வழக்கமான முறையில் ஓட்ஸ் சாப்பிடுவது கெட்ட கொலஸ்ட்ராலைக் குறைக்க உதவுகிறது. ஓட்ஸில் உள்ள பீட்டா குளுகன் குடலில் ஒரு ஜெல் போன்ற பொருளை உருவாக்கி, கொலஸ்ட்ராலுடன் பிணைந்து கொள்கிறது. இதன் மூலமாக கொலஸ்ட்ரால் உடலில் இருந்து வெளியேறுவதற்கு உதவி ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிக்கிறது.
ஓட்ஸ் என்பது மெதுவாக செரிமானம் ஆகும் ஒரு கார்போஹைட்ரேட் என்பதால் நாள் முழுவதும் படிப்படியாக ஆற்றலானது வெளியிடப்படுகிறது. இதனால் ரத்த சர்க்கரை அளவுகள் சீராகி தொடர்ச்சியாக ஆற்றல் கிடைக்கிறது.
ஓட்ஸில் உள்ள அதிக அளவு நார்ச்சத்து குடலில் இயக்கங்களைத் தூண்டி, மலச்சிக்கல் ஏற்படாமல் பார்த்துக் கொள்கிறது. உங்களுடைய நாளை ஓட்ஸுடன் ஆரம்பிக்கும் போது செரிமான அமைப்பு ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் இருக்கும்.
ஓட்ஸ் குறைவான கிளைசிமிக் எண் கொண்டது என்பதால் டயாபடீஸ் நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர்களுக்கு இது ஏற்றதாக அமைகிறது. ஓட்ஸில் உள்ள கரையும் நார்ச்சத்து ரத்தத்தில் சர்க்கரை மெதுவாக உறிஞ்சப்படுவதை உறுதி செய்து, உணவுக்குப் பிறகான ரத்த சர்க்கரையை சீராக வைக்கிறது.
ஓட்ஸில் B வைட்டமின்கள், இரும்புச்சத்து மற்றும் மெக்னீசியம் காணப்படுவதால் இது மூளையின் செயல்திறனை மேம்படுத்த உதவுகிறது. வழக்கமான முறையில் சாப்பிட்டு வர கவனிப்புத்திறன், ஞாபகசக்தி மற்றும் ஒட்டுமொத்த அறிவுத்திறன் செயல்பாடு மேம்படுகிறது.
ஓட்ஸில் உள்ள பீட்டா குளூகன் வெள்ளை ரத்த அணுக்கள் தொற்றுகளுக்கு எதிராக விரைவான பதில் வினை அளிப்பதற்கு நோய் எதிர்ப்பு அமைப்பை மேம்படுத்துகிறது. தினமும் காலை ஒரு கிண்ணம் ஓட்ஸ் சாப்பிடுவதன் மூலமாக வலிமையாக இருக்கலாம்.
ஆரோக்கியமான சருமம்:
ஓட்ஸில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் மற்றும் வீக்க எதிர்ப்பு பண்புகள் ஆரோக்கியமான மற்றும் மினுமினுப்பான சருமத்தைப் பராமரிப்பதற்கு உதவுகிறது. பல்வேறு சரும பராமரிப்பு பொருட்களில் கூட ஓட்ஸ் பயன்படுத்தப்படுகிறது.
பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் மாங்கனிசு போன்ற தாதுக்களின் சிறந்த மூலமாக அமையும் ஓட்ஸ் வலிமையான எலும்புகள் மற்றும் மூட்டு ஆரோக்கியத்திற்கு உதவுகிறது.
வழக்கமான முறையில் ஓட்ஸ் சாப்பிட்டு வர இதய நோய், உடற்பருமன் மற்றும் வகை 2 டயாபடீஸ் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் குறைகிறது. ஓட்ஸில் உள்ள நார்ச்சத்து, ஆன்டி-ஆக்சிடன்ட்கள் மற்றும் தாவர காம்பவுண்டுகள் இதனை ஒரு வலிமையான உணவாக மாற்றுகிறது.

























Bons Plans
Annuaire
Scan