Paristamil Navigation Paristamil advert login

மகளிர் உலகக்கிண்ண அரையிறுதியில் சதமடித்த கேப்டன்! எவரும் செய்யாத சாதனை

மகளிர் உலகக்கிண்ண அரையிறுதியில் சதமடித்த கேப்டன்! எவரும் செய்யாத சாதனை

29 ஐப்பசி 2025 புதன் 15:38 | பார்வைகள் : 119


2025 மகளிர் உலகக்கிண்ணத் தொடரின் முதல் அரையிறுதியில், தென் ஆப்பிரிக்க அணித்தலைவர் லௌரா வோல்வார்ட் சதம் விளாசி சாதனை படைத்தார்.

தென் ஆப்பிரிக்கா மற்றும் இங்கிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையிலான முதல் அரையிறுதிப் போட்டி கவுகாத்தியில் நடந்து வருகிறது.

நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தெரிவு செய்தது. அதன்படி தென் ஆப்பிரிக்க அணி முதலில் துடுப்பாடியது.


தொடக்க வீராங்கனையான லௌரா வோல்வார்ட் சிறப்பாக விளையாடி தனது 10வது ஒருநாள் சதத்தை பதிவு செய்தார்.

இதன்மூலம், நாக் அவுட் போட்டிகளில் சதம் விளாசிய முதல் அணித்தலைவர் என்ற இமாலய சாதனையை லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) படைத்தார்.

மேலும், ஒருநாள் கிரிக்கெட்டில் 5000 ஓட்டங்களை எட்டிய முதல் தென் ஆப்பிரிக்க வீராங்கனை என்ற சாதனையையும் படைத்துள்ளார். 

வர்த்தக‌ விளம்பரங்கள்