அவுஸ்திரேலிய இளம் பெண்களை வன்முறைச் செயல்களுக்கு தூண்டும் ஒன்லைன் குற்றக் குழுக்கள்
29 ஐப்பசி 2025 புதன் 16:38 | பார்வைகள் : 277
அவுஸ்திரேலிய இளம் வயது பெண்கள் ஒன்லைன் குற்றக் குழுக்களால் குறிவைக்கப்பட்டு வன்முறைச் செயல்களில் ஈடுபட தூண்டுவதாக அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வன்முறைச் செயல்களானது அவர்களுக்கு எதிராகவும், அவர்களின் உடன்பிறந்தவர்களுக்கு எதிராகவும் அல்லது செல்லப்பிராணிகளுக்கு எதிராகவும் தூண்டப்படுகிறது.
இச்சம்பவம் தொடர்பில் இதுவரை அவுஸ்திரேலியாவில் மூவர் கைதாகியுள்ளதுடன், வெளிநாடுகளில் 9 பேர்கள் கைதாகியுள்ளனர். அவுஸ்திரேலிய ஃபெடரல் காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் தெரிவிக்கையில்,
வன்முறைச் செயல்களை ஒரு வேடிக்கையாக நடத்தப்படுகிறது என்றார். மேற்கத்திய பின்னணி கொண்ட, 20 வயதுக்கு உட்பட்ட இளம் வயதினரே குறிவைக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளம் வயதினர் அதிகம் பயன்படுத்தும் குறிப்பிட்ட சில விளையாட்டு தளங்கள் அல்லது டெலிகிராம் மற்றும் டிஸ்கார்டு போன்ற செயலிகள் ஊடாக இளம் வயது பெண்களை அவர்கள் தொடர்புகொள்கின்றனர்.
அவுஸ்திரேலியாவில் மட்டும் கிட்டத்தட்ட 60 குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூறும் பாரெட், தற்போது இந்த விவகாரம் தொடர்பில் அமெரிக்கா, பிரித்தானியா, நியூசிலாந்து மற்றும் கனடா நிர்வாகங்களுடன் நடவடிக்கை எடுத்து வருவதாக குறிப்பிட்டுள்ளார்.
ஆனால், பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மற்றும் எந்த வகையான வன்முறைச் செயல்களில் ஈடுபட்டனர் என்பது தொடர்பில் அவர் விளக்கமளிக்க மறுத்துவிட்டார்.


























Bons Plans
Annuaire
Scan