கர்ப்பிணி தாய்மார்களுக்கு ஆரோக்யம் சேர்க்கும் ஃபோலேட் தானியங்கள்!!
12 ஆனி 2020 வெள்ளி 12:00 | பார்வைகள் : 9050
கர்ப்பிணி தாய்மார்களுக்கு பாலுக்கு அடுத்ததாக அதிக வலு சேர்ப்பது தானியங்கள். குறிப்பாக பருப்பு வகைகள்.
கொண்டல் கடலை, சோயா பீன்ஸ், பயறு, நிலக்கடலை என இந்த தானியங்களின் பட்டியல்கள் நீள்கின்றன.
இவ்வகை தானியங்களில் ஃபைபர், புரோட்டின், இரும்பு, கல்சியம் மற்றும் ஃபோலேட் (folate (B9))ஓன்ற சத்துக்கள் உள்ளன.
அதிலும், ஃபோலேட் ஒரு 'ஒன் மேன் ஆர்மி'! ஒத்தையாக நின்று அனைத்து தரப்பு குறைபாடுகளையும் கையாள்கிறது இந்த ஃபோலேட்!
இது ஒரு B9 வகை விட்டமின். இது செங்குருதி செல்களை உற்பத்தி செய்வதோடு, எலும்புகளுக்கு வலு சேர்க்கவும், கார்போஹைதரேட்டை சத்தாக மாற்றவும் DNA மற்றும் RNA களை உற்பத்தி செய்யவும் உதவுகின்றது. கர்ப்பிணி தாய்மார்களுக்கு இது காசில்லா ஊழியம்.
ஆகவே கர்ப்பிணி தாய்மார்களே... உங்கள் உணவில் மேற்கண்ட தானியங்களை சரியான இடைவெளியில், மிக குறிப்பாக முதல் மூன்று மாதங்களில் சேர்த்துக்கொள்ளுங்கள்...!!