"சாள்-து-கோல் செய்தது போல் மக்ரோன் பதவி விலக வேண்டும்!"
29 ஐப்பசி 2025 புதன் 17:34 | பார்வைகள் : 955
சாள்-து-கோல் செய்தது போல் ஜனாதிபதி மக்ரோன் பதவி விலகவேண்டும் என Bruno Retailleau தெரிவித்துள்ளார்.
Les Républicains கட்சியின் தலைவரும், முன்னாள் உள்துறை அமைச்சரும், செனட் சபை உறுப்பினருமான Bruno Retailleau , இன்று ஒக்டோபர் 29, புதன்கிழமை தெரிவித்தார். 'மக்ரோன் பதவி விலகலை தேர்ந்தெடுக்க வேண்டும்!' மூன்றுவிதமான தெரிவுகள் அவர் முன் உள்ளது. ஒன்று அவர் பதவி விலக வேண்டும். இரண்டாவது பாராளுமன்றத்தைக் கலைக்கவேண்டும். மூன்றாவது பொது வாக்கெடுப்புக்கு (பொதுத்தேர்தல்) செல்வது" என அவர் இன்று காலை வானொலி நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.
இதேபோன்ற ஒத்த கருத்தை முன்னாள் பிரதமர் எத்துவார் பிலிப் (Édouard Philippe) கடந்தவாரம் தெரிவித்திருந்தார்.
ஜெனரல் சாள்-து-கோல் ஜனாதிபதியாக இருக்கும் போது, பொது தேர்தலுக்கு அழைப்பு விடுத்தார். அதில் பெரும்பான்மை கிடைக்கவில்லை என்பதால் 1969 ஏப்ரல் 28 ஆம் திகதி அன்று பதவி விலகியிருந்தார்.


























Bons Plans
Annuaire
Scan