கனேடியக் குழந்தைகளுக்கு வழக்கமாக விற்றமின் K பெற்றோர்களை எச்சரிக்கும் மருத்துவர்கள்
30 ஐப்பசி 2025 வியாழன் 07:18 | பார்வைகள் : 277
கனேடியக் குழந்தைகளுக்கு வழக்கமாக விற்றமின் K ஊசிகள் செலுத்தப்படுகின்றன.
இந்நிலையில் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு விற்றமின் K ஊசி போடுவதை மறுப்பது கவலைக்குரிய நிலைமை என கனடாவின் அல்பேர்டா மாகாண மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
குறித்த ஊசிகள் பல தசாப்தங்களாகப் புதிதாகப் பிறந்த குழந்தைகளுக்கு நிலையான நடைமுறையாக வழங்கப்பட்டு வருகின்றன. பொதுவாக கனடாவில் பிறக்கும் குழந்தைகள் விற்றமின் K குறைபாட்டுடன் பிறப்பதாக தெரிவிக்கப்படுகிறது.
கனேடிய குழந்தை மருத்துவ சங்கம், பிற உயர் மருத்துவ அமைப்புகளுடன் சேர்ந்து, அனைத்து குழந்தைகளுக்கும் பிறந்த ஆறு மணி நேரத்துக்குள் தடுப்பூசி போட பரிந்துரைக்கிறது.
எனவே தவறான தகவல்களை நம்ப வேண்டாம் என மருந்துவர்கள் பெற்றோர்களை கேட்டுக்கொள்கின்றனர்.

























Bons Plans
Annuaire
Scan