உலகக்கிண்ண இறுதிப்போட்டிக்கு நுழைந்த தென் ஆப்பிரிக்கா
30 ஐப்பசி 2025 வியாழன் 08:18 | பார்வைகள் : 134
மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக தகுதிபெற்று வரலாறு படைத்தது.
கவுகாத்தியில் நேற்று நடந்த மகளிர் உலகக்கிண்ண அரையிறுதியில் (1) இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா அணி 7 விக்கெட் இழப்பிற்கு 319 ஓட்டங்கள் குவித்தது. ருத்ர தாண்டவம் ஆடிய அணித்தலைவர் வோல்வார்ட் 169 ஓட்டங்கள் விளாசினார்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து அணி 42.3 ஓவர்களில் 194 ஓட்டங்களுக்கு ஆல்அவுட் ஆகி தோல்வியுற்றது. நட் சிவர் பிரண்ட் 64 ஓட்டங்களும், அலிஸ் கேப்ஸி 50 ஓட்டங்களும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி முதல் முறையாக உலகக்கிண்ண இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.
இப்போட்டியில் 143 பந்துகளில் 4 சிக்ஸர்கள், 20 பவுண்டரிகளுடன் 169 ஓட்டங்கள் விளாசிய லௌரா வோல்வார்ட் (Laura Wolvaardt) ஆட்டநாயகி விருது பெற்றார்.


























Bons Plans
Annuaire
Scan