இலங்கையின் முதியோர் தொகையில் ஏற்பட்டுள்ள அதிகரிப்பு!
30 ஐப்பசி 2025 வியாழன் 13:05 | பார்வைகள் : 166
ஆசிய பிராந்தியத்தில் வேகமாக வளர்ந்து வரும் முதியோர் மக்கள் தொகையைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக இலங்கை அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
2012 ஆம் ஆண்டில், இலங்கையின் முதியோர் மக்கள் தொகை மொத்த மக்கள் தொகையில் 12% ஆக இருந்ததாகவும், 2024 ஆம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 18% ஆக அதிகரித்துள்ளதாகவும் ஆலோசகர் சமூக வைத்தியர் நிஷானி உபேசேகர தெரிவித்தார்.
சுகாதார மேம்பாட்டு பணியகம் ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் இது தொடர்பில் மேலும் உரையாற்றிய அவர்,
2012 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இலங்கையின் மக்கள் தொகையில் 12% பேர் 60 வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்கள்.
2024 மக்கள் தொகை கணக்கெடுப்பில், இது 18% ஆக உயர்ந்துள்ளது.
2040 ஆம் ஆண்டுக்குள், மக்கள் தொகையில் 25% – அதாவது, ஒவ்வொரு நான்கு பேரில் ஒருவர் – முதியவர்களாக இருப்பார்கள் என்று நாங்கள் கணித்துள்ளோம்.
ஏனைய ஆசிய நாடுகளுடன் ஒப்பிடும்போது, இலங்கை அதன் முதியோர் மக்கள்தொகையில் அதிக வளர்ச்சி விகிதங்களைக் கொண்ட நாடுகளில் ஒன்றாக அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்த நிலைமை முக்கியமாக பிறக்கும் போது ஆயுட்காலம் அதிகரிப்பதாலும் பிறப்பு விகிதங்கள் குறைவதாலும் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.


























Bons Plans
Annuaire
Scan