சட்டவிரோதமாக தங்குதலை மீண்டும் குற்றமாக்கும் முயற்சியில் RN கட்சி தோல்வி!!
 
                    30 ஐப்பசி 2025 வியாழன் 21:36 | பார்வைகள் : 900
பிரான்ஸ் தேசிய சபையில், தீவிர வலதுசாரி Rassemblement national (RN) கட்சி சட்டவிரோதமாக நாட்டில் தங்கியிருப்பதை மீண்டும் குற்றமாக்க முயன்ற மசோதா தோல்வியடைந்தது.
இடதுசாரி, மக்ரோனிய மற்றும் MoDem கட்சியினர் மசோதாவின் முக்கிய பிரிவை நீக்கியதால், RN கட்சி அதைத் திரும்பப் பெற்றுள்ளது. உள்துறை அமைச்சர் லாரன்ட் நுனியஸ் (Laurent Nuñez) இந்த நடவடிக்கை எந்த புதிய விளைவையும் கொண்டு வராது எனக் கூறியுள்ளார், ஆனால் மெரின் லூ பென் அதற்கு எதிராக பாதுகாப்பு படைகள் இதை ஆதரிப்பார்கள் என வாதிட்டுள்ளார்.
இந்த குற்றச்சாட்டு முதலில் 2012ல் ஒலந்து (François Hollande) ஆட்சியில் ரத்து செய்யப்பட்டது. அதன் படி, சட்டப்பூர்வ அனுமதியின்றி பிரான்சில் தங்கியிருப்பது அபராதம் அல்லது சிறைத் தண்டனைக்குரிய குற்றமாக இருந்தது. ஆனால் RN கட்சி அதை மீண்டும் கொண்டு வர முயன்றது. மசோதாவுக்கு Les Républicains மற்றும் சில Horizons கட்சி உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
சில்வி ஜொஸ்செராண்ட் (Sylvie Josserand), மக்ரோனியர்கள் மற்றும் இடதுசாரிகளின் கூட்டுச்சதி எனக் குற்றம் சாட்டியுள்ளார், அதேசமயம் இடதுசாரி நாடாளுமன்ற உறுப்பினர் ஓரேலி ட்ரூவே (Aurélie Trouvé) RN கட்சியை வெளிநாட்டவர்களுக்கு எதிரான வெறியால் வழிநடத்தப்படுகிறது என விமர்சித்துள்ளார்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan