Nothing Phone 3a Lite சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் அறிமுகம்
 
                    31 ஐப்பசி 2025 வெள்ளி 10:06 | பார்வைகள் : 151
சிறந்த அம்சங்களுடன் குறைந்த விலையில் Nothing Phone 3a Lite அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
லண்டனை தலைமையிடமாகக் கொண்ட தொழில்நுட்ப நிறுவனமான Nothing, அதன் புதிய ஸ்மார்ட்போன் மொடலான Phone 3a Lite-ஐ உலகளவில் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது Phone 3a வரிசையில் மிகக் குறைந்த விலை மொடலாகும். இந்தியாவில் Flipkart வாயிலாக விரைவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதில் Android 15 அடிப்படையிலான Nothing OS 3.5 கொடுக்கப்பட்டுள்ளது.
MediaTek Dimensity 7300 Pro 4nm சிப்செட் மூலம் இயக்கப்படும் இந்த போன், 8GB RAM மற்றும் 128GB/256GB சேமிப்பு விருப்பங்களுடன் வருகிறது. microSD கார்டு மூலம் 2TB வரை விரிவாக்கம் செய்யலாம்.
6.77 inch Full HD+ Flexible AMOLED screen, 120Hz refresh rate, 3,000 nits brightness மற்றும் Panda Glass பாதுகாப்புடன் வருகிறது. Glyph Light notification system மற்றும் transparency design ஆகியவை Nothing-இன் தனித்துவமான வடிவமைப்பை வெளிப்படுத்துகின்றன.
பின்புறம் 50MP primary camera (OIS, EIS), 8MP ultra-wide மற்றும் 2MP macro lens கொண்ட மூன்று கமெராக்கள் உள்ளன. முன்புறம் 16MP camera உள்ளது. 4K 30fps, 1080p 60fps மற்றும் slow-motion 120fps வரை வீடியோ பதிவு செய்யலாம்.
5,000mAh பேட்டரி, 33W Fast charge மற்றும் 5W reverse charging வசதியுடன் வருகிறது. IP54 rating, in-display fingerprint sensor, Wi-Fi 6, Bluetooth 5.3 உள்ளிட்ட இணைப்பு அம்சங்களும் உள்ளன.
இதன் 128GB மொடலின் விலை EUR/GBP 249, 256GB மொடலின் விலை EUR/GBP 279 ஆகும். இந்தியாவில் இந்த மொபைல் ரூ.20,000 முதல் விலை நிர்ணயிக்கப்படலாம்.  
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 பொதிகள் அனுப்பும் சேவை
        பொதிகள் அனுப்பும் சேவை         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan