உக்கிரமாக நீடித்து வரும் உக்ரைன் போர்...!
 
                    31 ஐப்பசி 2025 வெள்ளி 10:06 | பார்வைகள் : 316
உக்ரைன் போர் தொடர்ந்து உக்கிரமாக நீடித்து வரும் நிலையில், உக்ரைன் தனது பாதுகாப்பை வலுப்படுத்த மேம்பட்ட ஆயுதங்களை நாடியுள்ளது.
கடந்த 2022 பிப்ரவடி மாதம் தொடங்கிய உக்ரைன் மீதான தாக்குதலை ரஷ்யா உக்கிரமாகவே நீட்டித்து வருகிறது. ஜனாதிபதி ட்ரம்ப் முன்னெடுத்த சமாதானப் பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிய, ரஷ்ய எண்ணெய் நிறுவனங்கள் இரண்டு மீது பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா விதித்துள்ளது.
இந்த நிலையில், மிக சமீபத்தில் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி அமெரிக்காவிடம் Tomahawk ஏவுகணைகளை தங்களுக்கு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வைத்தார்.
இந்த விவகாரத்தில் சாதகமான முடிவெடுக்கப்படும் என கூறி வந்த ட்ரம்ப், திடீரென்று ஜெலென்ஸ்கியின் கோரிக்கையை நிராகரித்தார். ஆனால் உக்ரைன் தரப்பு தங்களின் வலுவான ட்ரோன் படையை அடுத்தகட்டத்திற்கு மேம்படுத்தியதுடன், கருங்கடலில் ரஷ்யாவின் ஆதிக்கத்தை முறியடிக்கும் வகையில் உயர்ந்துள்ளது.
உக்ரைன் இராணுவத்தால் Sea baby என அழைக்கப்படும் ட்ரோன் படையின் புதிய மேம்படுத்தப்பட்ட ட்ரோன் ஒன்றை உக்ரைன் அறிமுகம் செய்துள்ளது. இதில் பொருத்தப்பட்டுள்ள உயர் ரக MLRS அமைப்பால் ஒரே நேரத்தில் பல இலக்குகளைத் தாக்க முடியும்.
முழுமையாக கட்டுப்பாட்டு அறையில் இருந்து இயக்கக் கூடிய இந்த ட்ரோன், கொந்தளிப்பான கடலிலும் துல்லியமாக செயல்படக் கூடியது. மட்டுமின்றி, புதிய மேம்படுத்தப்பட்ட Sea baby ட்ரோனால் சுமார் 1500 கி.மீ வரையில் செயல்பட முடியும். மட்டுமின்றி, 2000 கிலோ எடையை எடுத்துச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
இந்த ட்ரோனின் மிகப்பெரிய பலம் என்பது அதன் புதுமையான வடிவமைப்பு ஆகும். உக்ரைனில் உள்ள பொறியாளர்கள் இதை பல-பங்கு அமைப்பாக மாற்றியுள்ளனர்.
சூழ்நிலையைப் பொறுத்து, அது ஒரு கணம் கடலோர கண்காணிப்புகள் மீது ராக்கெட்டுகளை மழையாகப் பொழிய முடியும், பின்னர் அதன் இயந்திர துப்பாக்கியால் ரோந்து படகுகள் அல்லது ஹெலிகாப்டர்களை குறிவைக்கவும் முடியும்.
2023 முதல், sea baby கருங்கடலில் ரஷ்யாவின் செயல்பாடுகளில் அழிவை ஏற்படுத்தி வருகிறது. இது கெர்ச் பாலத்தை பலமுறை தாக்கியுள்ளது; இருப்பினும், ஜூன் 2023 இல் நடந்த தாக்குதல் மிகவும் கொடியது என்றே கூறுகின்றனர்.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.
        KBis தேவைகளை குறைந்த கட்டணத்தில் பெற்றுக்கொள்ள.         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan