Paristamil Navigation Paristamil advert login

இதை செய்ய மறந்தால் முக அழகு கெடும்

இதை செய்ய மறந்தால் முக அழகு கெடும்

29 வைகாசி 2020 வெள்ளி 17:44 | பார்வைகள் : 11919


 முகத்தை ஆரோக்கியமாக வைத்துகொள்ள என்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்துகொள்ள ஆர்வம் செலுத்தும் பலரும் என்னவெல்லாம் முகத்தில் அழகை குலைக்கும் என்பதை தெரிந்து கொள்ள விரும்புவதில்லை. அழகு தரும் என்று செய்யும் சில பராமரிப்புகள், சில கவனக்குறைவுகள் போன்றவையும் முகத்தின் அழகை குறைத்து காண்பிக்கவே செய்யும். அப்படி உங்களையும் அறியாமல் நீங்கள் செய்யும் சில தவறுகள் என்னவென்பதை பார்க்கலாம். இதை கவனமாக தவிர்த்தாலே உங்கள் முகம் அழகாய் ஆரோக்கியமாய் இருக்கும்.

 
மேக் அப் செய்ய பயன்படுத்தும் பொருள்கள் சாதாரணமாக இருந்தாலும் அதை அவ்வபோது சுத்தம் செய்ய வேண்டும். ஆனால் மேக் அப் முக்கியத்துவம் கொடுக்கும் பெண்கள் அதை சுத்தம் செய்து பயன்படுத்துவதை மறந்துவிடுகிறார்கள்.
 
 
முகத்துக்கு, கண்களுக்கு, உதடுக்கு என்று பலவிதமான பிரஷ்களை பயன்படுத்துகிறோம். ஒவ்வொரு முறை பயன்பாட்டுக்கு பிறகும் அதில் கண்ணுக்குத்தெரியாத அழுக்குகளும், தூசுக்களும் இருக்கவே செய்யும். மீண்டும் மீண்டும் அதை பயன்படுத்தும் போது முகத்தின் அழகு தாண்டி அதிலிருக்கும் பொருள்கள் சருமத்துளைகளில் ஊடுருவி பருக்களையும், சரும நிறத்தையும் மாற்றிவிடும். அவ்வபோது பிரஷ்களை சுத்தம் செய்து பயன்படுத்துங்கள். குறிப்பிட்ட நாட்களுக்கு மேல் பிரஷ்ஷை பயன்படுத்தாமல் மாற்றுவது பாதுகாப்பானது.
 
பார்ட்டி, திருமண விசேஷ நாளுக்கென்று பிரத்யேகமான க்ரீம்கள் அதிக விலை கொடுத்துவாங்குபவர்கள் உண்டு. அதை பயன்படுத்தியதும் மீண்டும் பத்திரப்படுத்தி உபயோகப்படுத்தாமல் வைத்திருப்பார்கள். அதே போன்று முகத்துக்கு பயன்படுத்தும் ஒப்பனை க்ரீம்களை எப்போதாவது பயன்படுத்துவதும் உண்டு. இன்னும் சிலர் அது காலாவதியான தேதி கூட பார்க்காமல் நீண்ட நாள் வைத்திருப்பார்கள்.
 
ஏற்கனவே கெமிக்கல் கலந்த இந்த பொருள்கள் நீண்ட நாள்களுக்கு பிறகு பயன்படுத்தும் போது அதிகப்படியான பிரச்சனையை சருமத்தில் உண்டாக்கும். இனி க்ரீம்களை பயன்படுத்தும் போது நீண்ட நாள் வைத்து பயன்படுத்தவேண்டாம். இதையும் மனதில் கொள்ளுங்கள்.
 
முகத்தின் அழகு குறைவதிலும், கூந்தலில் பொடுகும் உருவாக்குவதில் பெரும்பங்கு தலையணைக்கு உண்டு. தலையணையில் படியும் அழுக்கு, எண்ணெய் பிசுபிசுப்பு போன்றவை முகத்தில் படியக்கூடும். இரவு நேரத்தில் ஆழ்ந்து தூங்கும் போது முகத்தை தலையணையில் புதைத்து தூங்குபவர்கள் முகத்தின் ஆரோக்கியத்தை இழக்கிறார்கள். தலையணை சுத்தமாக இருந்தாலே முகத்தின் ஆரோக்கியம் பாதி காப்பாற்றலாம்.
 
மேக் அப் பயன்படுத்துவதில் செலுத்தும் கவனத்தை மேக் அப் ரீமூவ் செய்வதிலும் கடைபிடிக்க வேண்டும். பலரும் செய்யும் தவறு இது. வெளியில் செல்லும் போது அதிக சிரத்தையுடன் முகத்துக்கு மேக் அப் போடுவார்கள். அதே போன்று வீட்டுக்கு திரும்பியதும் முகத்தை சுத்தமாக்க வேண்டும்.
 
குறிப்பாக கண்கள், உதடு பகுதியை சுற்றி கூடுதலகா சுத்தம் செய்ய வேண்டும். அதே போன்று முகத்தில் இருக்கும் க்ரீம்களும் நீங்கும் வகையில் சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பிறகு சுத்தமான நீரில் முகத்தை கழுவி இயற்கை மாய்சுரைஸர் போடலாம். தினமும் இதை செய்துவந்தாலே முகத்தின் நிறம் மங்காமல், கரும்புள்ளிகள் வராமல் ஆரோக்கியமாக இருக்கும்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்