Paristamil Navigation Paristamil advert login

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க சுற்றிவளைப்பு - பொலிஸார் உட்பட 64 பேர் பலி

பிரேசிலில் போதைப்பொருள் கடத்தல் கும்பலை பிடிக்க சுற்றிவளைப்பு - பொலிஸார் உட்பட 64 பேர் பலி

31 ஐப்பசி 2025 வெள்ளி 16:20 | பார்வைகள் : 525


போதைப்பொருள் கடத்தல் கும்பலை கைது செய்ய 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் நடத்திய சுற்றிவளைப்பின் போது நடந்த தாக்குதலில் 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

பிரேசிலின் ரியோ டி ஜெனிரோவில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் நடமாட்டம் அதிகரித்துள்ளது. இதனை தடுக்க 2500க்கும் மேற்பட்ட பிரேசில் பொலிஸார் சோதனை நடத்தியுள்ளனர்.

இந்த சோதனையின் போது கடத்தல் கும்பலைச் சேர்ந்தவர்கள் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளனர்.

இதையடுத்து பதிலுக்கு பிரேசில் பொலிஸார் தாக்குதல் நடத்தியுள்ளனர்.

இதனால் மோதல் முற்றியுள்ளது.

இந்த தாக்குதலின் போது 4 பொலிஸார் உட்பட 64 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 80 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் உள்ள 46 பாடசாலைகள் மூடப்பட்டதாகவும், பெடரல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு வகுப்புகளை இரத்து செய்துள்ளது. 

பல்கலையில் தங்கி படிக்கும் மாணவர்கள் விடுதியில் பத்திரமாக இருக்கின்றனர் என கல்வித்துறை தெரிவித்துள்ளது.

போதைப்பொருள் கடத்தல் கும்பல் மீதான ஒரு வருட விசாரணையைத் தொடர்ந்து, இந்த அதிரடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நடவடிக்கை வரலாற்றில் மிகப்பெரியது.

குற்றங்களை எதிர்த்துப் போராடுவதற்கு அரசாங்கம் கூடுதல் ஆதரவை வழங்க வேண்டும் என ரியோ டி ஜெனிரோ நகர் கவர்னர் கிளாடியோ காஸ்ட்ரோ தெரிவித்துள்ளார்.

இதனால் ரியோ டி ஜெனிரோ நகரில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. அப்பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்