Paristamil Navigation Paristamil advert login

சூர்யா 47 படத்தில் இணையும் பிரபல மலையாள நட்சத்திரங்கள்?

சூர்யா  47 படத்தில் இணையும் பிரபல மலையாள நட்சத்திரங்கள்?

31 ஐப்பசி 2025 வெள்ளி 16:33 | பார்வைகள் : 237


நடிகர் சூர்யா தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் தனது 46வது படத்தில் நடித்து வருகிறார். இதன் பிறகு அவரின் 47வது படத்தை மலையாளத்தில் வெற்றிகரமாக வெளியான ஆவேசம் திரைப்படத்தின் இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்தப் படத்தை சூர்யா புதிதாக தொடங்கியுள்ள ழகரம் என்ற தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரிக்க உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது.

தற்போது ஜித்து மாதவன் இப்படத்திற்கான முன் தயாரிப்பு பணிகளில் ஈடுபட்டு வருகிறார். ஏற்கனவே இதில் நஸ்ரியா கதாநாயகியாகவும், பஹத் பாசில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளதாகவும் செய்திகள் வெளியான நிலையில், இப்போது ‘பிரேமலு’ படத்தின் மூலம் பிரபலமான நஸ்லின் இந்தப் படத்தில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

வர்த்தக‌ விளம்பரங்கள்