Paristamil Navigation Paristamil advert login

சமந்தா நிராகரித்த படங்கள் எல்லாம் தோல்வியா?

சமந்தா நிராகரித்த படங்கள் எல்லாம் தோல்வியா?

31 ஐப்பசி 2025 வெள்ளி 16:33 | பார்வைகள் : 227


நடிகை சமந்தா தனது சினிமா வாழ்வில் வெற்றிகரமானவர். திருமணம், உடல்நலப் பிரச்சினைகளால் தற்போது வேகம் குறைந்தாலும், முன்பு தொடர் வெற்றிகளால் தென்னிந்தியாவில் ஜொலித்தார்.

ராம் சரணின் சூப்பர் ஹிட் படமான 'யேவடு' படத்தில் முதலில் சமந்தாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. ஆனால் உடல்நலக் குறைவால் அவர் அந்தப் படத்தை கைவிட்டார். இதில் ஸ்ருதி ஹாசன் நடித்தார்.

சமந்தா நிராகரித்த மற்றொரு படம் 'புரூஸ் லீ'. கால்ஷீட் பிரச்சினை காரணமாக சமந்தா இப்படத்தை கைவிட்டார். ஆனால், இப்படம் தோல்வியடைந்தது. அந்த வாய்ப்பு ரகுல் ப்ரீத் சிங்கிற்கு சென்றது.

பாலகிருஷ்ணாவின் சினிமா வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப் படங்களில் ஒன்று 'என்.டி.ஆர் கதாநாயகடு'. இதில் ஒரு பழம்பெரும் நடிகை பாத்திரத்திற்கு சமந்தாவை அணுகினர். ஆனால் அவர் நிராகரித்துவிட்டார்.

ஷங்கர்-விக்ரம் கூட்டணியில் மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவான படம் 'ஐ'. இப்படத்தில் கதாநாயகியாக முதலில் சமந்தாவை தான் ஷங்கர் அணுகினார். ஆனால் சில காரணங்களால் சமந்தா இதில் நடிக்கவில்லை.

நானியுடன் 'நான் ஈ', 'நீதானே என் பொன்வசந்தம்' படங்களில் சமந்தா நடித்தார். 'நின்னு கோரி' படத்திலும் வாய்ப்பு வந்தது. ஆனால் திருமண வேலைகளால் நிராகரித்தார். அவர் பெரும்பாலும் தோல்விப் படங்களையே நிராகரித்துள்ளார்.

வர்த்தக‌ விளம்பரங்கள்