சினிமாவில் அறிமுகமாகிறாரா குஷ்புவின் மகள்?
 
                    31 ஐப்பசி 2025 வெள்ளி 16:33 | பார்வைகள் : 286
தமிழ் சினிமாவில் 90களில் கலக்கிய நடிகை குஷ்பு அரசியலில் இறங்கியதில் இருந்து திமுக மற்றும் காங்கிரஸ் ஆகியக் கட்சிகளில் சில காலம் இருந்துவிட்டு தேர்தல் சமயத்தில் பாஜகவில் ஐக்கியம் ஆனார். எந்த கட்சியிலும் கடுமையாக உழைக்காமல் பதவிக்காக கட்சி மாறிக்கொண்டே இருப்பதுதான் குஷ்புவின் வழக்கம் என்று கேலிகளும் மீம்ஸ்களும் பரவின. பாஜகவில் அவருக்கு சென்னை ஆயிரம் விளக்கு தொகுதி ஒதுக்கப்பட்டது. ஆனால் படுதோல்வியை சந்தித்தார்.
இந்நிலையில் இப்போது சீரியலில் ஆர்வம் காட்டி வருகிறார். அவருக்கு அத்திகா, அவந்திகா என இருமகள்கள் உள்ளனர். இதில் அத்திகா இயக்குனர் ஆகும் ஆசையில் இயக்குனர் மணிரத்னத்தின் ‘தக் லைஃப்’ படத்தில் உதவி இயக்குனராகப் பணியாற்றினார்.
ஆனால் அவந்திகாவோ அம்மாவைப் போல அரிதாரம் பூசி நடிக்கும் முடிவை எடுத்துள்ளார். சமீபகாலமாக அவந்திகா தனது கிளாமரான புகைப்படங்களை இணையத்தில் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களில் பகிர்ந்து வந்தார். இந்நிலையில் இப்போது அவர் கதாநாயகியாக நடிக்கக் கதை ஒன்றை குஷ்பு தேர்வு செய்துவிட்டதாகவும் விரைவில் அது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் சொல்லப்படுகிறது.
 
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று






 Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்
        Climatiseur : 1 890€ க்கு இயந்திரம் மற்றும் நிறுவல்         
     


 
        
         
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan