வெள்ள அனர்த்தம்! - இருவர் பலி!
 
                    31 ஐப்பசி 2025 வெள்ளி 16:46 | பார்வைகள் : 658
வெள்ள அனர்த்தம் காரணமாக இருவர் பலியான சம்பவம் தெற்கு பிரான்சில் இடம்பெற்றுள்ளது.
Drôme மாவட்டத்தில் மழை வெள்ளம் நேற்று வியாழக்கிழமை முதல் பீடித்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக வெள்ளம், மரமுறிவு போன்ற அனர்த்தங்கள் பதிவாகியுள்ளன. நேற்று வியாழக்கிழமை இரவு இருவர் வெள்ளத்தில் சிக்கி காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டிருந்தார்கள்.
இந்நிலையில், அவர்கள் இருவரும் இன்று வெள்ளிக்கிழமை காலை சடலமாக மீட்கப்பட்டனர். சம்பவ இடத்தில் இருந்து 10 கி.மீ தொலைவில் அவர்களது மகிழுந்தும், அங்கிருந்து 1.5 கி.மீ தொலைவில் சடலங்களும் மீட்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒருவர் 33 வயதுடையவர் எனவும், இரண்டாமவர் 38 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது. குறித்த நகரில் பாயும் Eygues ஆற்றின் நீர்மட்டம் 1.78 இனை எட்டியுள்ளது. பொதுமக்களுக்கு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
 வாங்க - விற்க | வேலை
வாங்க - விற்க | வேலை  நாணய மாற்று
நாணய மாற்று







 இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€
        இறுதிச் சடங்கு அனைத்தையும் 3500€         
     


 
        
        .jpeg) 
        
         
        
         
        
         
        
        
















 Bons Plans
Bons Plans Annuaire
Annuaire Scan
Scan