Paristamil Navigation Paristamil advert login

கூகுளில் இந்த 4 விஷயங்களை மட்டும் தேடாதீர்கள்! மீறினால் இதுதான் தண்டனை

கூகுளில் இந்த 4 விஷயங்களை மட்டும் தேடாதீர்கள்! மீறினால் இதுதான் தண்டனை

1 கார்த்திகை 2025 சனி 10:48 | பார்வைகள் : 150


கூகுளில் தெரியாமல் கூட இந்த 4 விஷயங்களை தேடக்கூடாது, ஏனென்றால் அது உங்களை சட்ட சிக்கலுக்குள் தள்ளி விடும்.

இணையதளம் என்பது அறிவு தேடலுக்கு எவ்வளவு உதவிகரமாக உள்ளதோ அதே போல சமூகத்தை தேவையற்ற வழிகளில் எடுத்து செல்லவும் பயன்படுத்தப்படுகிறது.

அந்த வகையில் ஒவ்வொரு நாட்டின் அரசாங்கமும் தங்கள் நாட்டின் குடிமக்கள் இணையத்தில் என்ன தேடுகிறார்கள் என்பதை உன்னிப்பாக கவனித்து வருகிறது.

சில குறிப்பிட்ட தேடல்கள் உங்களை நேரடி விசாரணைக்கு அழைத்து செல்லும், சில தேடல்கள் உங்களுக்குக் கடுமையான அபராதத்தை பெற வழிவகுக்கும்.

எனவே எந்தெந்த தேடல்கள் நம்மை சிக்கலுக்குள் தள்ளும் என்பதை தற்போது பார்ப்போம்.

வெடிகுண்டு தயாரிப்பது எப்படி?
உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளில் வெடிகுண்டு தயாரிப்பதும், அதை எப்படி தயாரிப்பது என்று தெரிந்து கொள்வதும் சட்டப்படி குற்றமாக பார்க்கப்படுகிறது.

அப்படிப்பட்ட நிலையில், நீங்கள் வெடிகுண்டு எப்படி தயாரிப்பது அல்லது அது தொடர்பான விவரங்களை தொடர்ந்து தேடினால் நீங்கள் சிறைவாசம் முதல் சட்ட ரீதியான பல சிக்கல்களை சந்திக்க நேரிடும்.

குழந்தை துஷ்பிரயோக படங்கள்
உலக நாடுகள் மத்தியில் கடுமையான குற்றமாகக் குழந்தை துஷ்பிரயோகங்கள் பார்க்கப்படுகிறது.

இது போன்ற தேடல்கள் உங்களை நேரடியாக குற்றவியல் குற்றத்தின் கீழ் நீதிமன்ற விசாரணைக்குள் தள்ளும்.


இந்தியாவை பொறுத்தவரை, குழந்தைகள் மற்றும் சிறார்களை பாதுகாக்க POCSO என்ற தனிச்சட்டம் உள்ளது.

ஹேக்கிங் பயிற்சி வீடியோக்கள்
இணையத்தில் ஹேக்கிங் செய்வது எப்படி? அல்லது ஹேக்கிங் பயிற்சி வீடியோக்களை பார்ப்பது ஆகியவை சட்டப்படி குற்றமாகும்.

இந்திய அரசும், பாதுகாப்பு நிறுவனங்களும் ஹேக்கிங் தொடர்பான தேடல்களை உன்னிப்பாக கவனித்து வருகிறது. எனவே விழிப்புடன் இருப்பது அவசியமாகும்.

திருட்டு திரைப்படங்கள்
திரைப்படங்களைப் பார்ப்பதற்கு அதற்கான ஸ்ட்ரீமிங் தளங்கள் உள்ள நிலையில், அவற்றை திருட்டு தனமாக பதிவிறக்கம் செய்து பார்ப்பது பதிப்புரிமை சட்டத்தின் படி குற்றமாகும்.

மேலும் சில சமயங்களில் அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட புகைப்படங்களை பார்ப்பதும், பதிவிறக்கம் செய்தும் சட்டப்படி குற்றமாகும்.


இத்தகைய குற்றச்சாட்டுகளின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டால் குறைந்தது மூன்று ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 10 லட்சம் வரை அபராதமும் விதிக்கப்படும்.

 

வர்த்தக‌ விளம்பரங்கள்