நெய் மட்டன் சுக்கா.
1 கார்த்திகை 2025 சனி 14:55 | பார்வைகள் : 114
ஞாயிற்றுக்கிழமை ஆனாலே அசைவ உணவு இல்லன்னா சாப்பாடு சாப்பிட தோனாது. மட்டன், சிக்கன்னு சாப்பிடும்போது, மட்டன் கிரேவிக்கு பதிலா மணப்பட்டி ஃபேமஸ் நெய் மட்டன் சுக்கா எப்படின்னு வேற லெவலான டேஸ்ட்ல எப்படி செய்றதுனு பார்க்கலாமா
தேவையான பொருட்கள்;-மட்டன் கறி, நெய், சின்ன வெங்காயம், வெள்ளைப்பூண்டு, காய்ந்த மிளகாய், இஞ்சி, முந்திரி, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, கருவேப்பிலை, கொத்தமல்லி.
செய்முறை;-குக்கர் எடுத்து அதில் சுத்தம் செய்து ஆட்டிறைச்சி போட்டு, உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் பொடி, இஞ்சியை இடித்து சேர்க்க கொண்டு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி 5 விசில் வரும் வரை கொதிக்க விட வேண்டும்.
கடாயில் நெய் ஊற்றி காய வைத்து, சின்ன வெங்காயம், முந்திரி, காய்ந்த மிளகாய் சேர்த்து வதக்க வேண்டும். இதன்பின் வெள்ளை பூண்டு இடித்து சேர்த்து நன்றாக வதக்கி கொள்ளவும்.
இதனுடன் வேகவைத்த மட்டனை சேர்த்த நன்றாக கொதிக்க விடவும். தண்ணீர் வற்றும் வரை அடி பிடிக்காமல் நன்றாக வதக்கி கருவேப்பிலை கொத்தமல்லி இவை இண்டும் சேர்த்து எடுத்து நன்றாக வதக்கி எடுத்தால் பஞ்சு போன்று வந்த மட்டனுடன் மணப்பட்டி ஃபேமஸான நெய் சுக்கா அசத்தும் டேஸ்ட்ல தயாராகிவிடும்.


























Bons Plans
Annuaire
Scan