Paristamil Navigation Paristamil advert login

குழந்தைகளை குறிவைக்கும் மலேரியா

குழந்தைகளை குறிவைக்கும் மலேரியா

11 வைகாசி 2020 திங்கள் 17:07 | பார்வைகள் : 9454


 கொசுக்களால் பரவும் முக்கிய நோயாக மலேரியா அமைந் திருக்கிறது. மற்ற வயதினரை ஒப்பிடும்போது குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால் கூடுதல் அக்கறை கொள்ள வேண்டியது அவசியம். குழந்தைகளைத்தான் கொசுக்கள் எளிதில் கடிக்கும். மலேரியா, சிக்குன்குனியா, டெங்கு போன்ற நோய்களையும் பரப்பிவிடும். அதில் மலேரியாதான் குழந்தைகளுக்கு அதிக பாதிப்பை ஏற்படுத்தும். மலேரியா நோய்க்கான அறிகுறிகள் குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் வேறுபடும். அதனை பெற்றோர் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

 
* வெப்பமான காலநிலைதான் மலேரியாவுக்கு சாதகமாக அமைந்திருக்கும். எரிச்சல், பசியின்மை, தூங்குவதில் சிக்கல் போன்றவை மலேரியா காய்ச்சலுக்கான ஆரம்பக்கட்ட அறிகுறிகளாகும். சளி, காய்ச்சல் இரண்டாம் கட்ட அறிகுறிகளாகும். காய்ச்சலின்போது குழந்தைகள் வேகமாக சுவாசிக்க ஆரம்பிப்பார்கள். ஓரிரு நாட்கள் உடல் வெப்பநிலை கடுமையாக அதிகரிக்கும். சில சமயங்களில் திடீரென்று 105 டிகிரிக்கும் மேல் செல்லும்.
 
 
* காய்ச்சல் குறையும்போது உடல் வெப்பநிலை இயல்புக்கு திரும்ப தொடங்கும். அப்போது வியர்வையும் வெளிப்படும்.
 
* வியர்வை, காய்ச்சல், குளிர்த்தன்மை போன்ற அறிகுறிகள் இரண்டு மூன்று நாட்களாக மாறி மாறி தொடர்ந்து கொண்டிருந்தால் அது மலேரியா தொற்று பரவுவதற்கான அறிகுறியாகும்.
 
* குமட்டல், தலைவலி, தசைவலி, முதுகுவலி போன்றவை மலேரியா காய்ச்சலுக்கான பொதுவான அறிகுறிகளாக இருக்கின்றன. மலேரியா வைரஸ் குழந்தைகளின் மூளை மற்றும் சிறுநீரகத்தையும் பாதிக்கும். மூளையில் அதன் தாக்கம் அதிகரிக்கும்போது ஞாபகத்திறன் பாதிப்புக்குள்ளாகும். சிறுநீரகம் பாதிப்புக்குள்ளாகும்போது குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் அளவு குறையும். இத்தகைய அறிகுறி கள் தென்பட்டால் மருத்துவ பரிசோதனை மேற்கொள்வது அவசியமானது. சரியான சமயத்தில் சிகிச்சை அளிப்பதன் மூலம் நோய் தாக்கத்தில் இருந்து எளிதாக விடுபட்டுவிடலாம். குழந்தைகள் வெளியே செல்லும்போது கொசுக்களை விரட்டும் கிரீம், லோஷன்களை கை, கால்களில் தடவுவது பாதுகாப்பானது. வீட்டிலும் கொசு விரட்டியை உபயோகியுங்கள்.
 
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்