Paristamil Navigation Paristamil advert login

அழகான உதட்டிற்கு கிளிசரின்

அழகான உதட்டிற்கு கிளிசரின்

9 சித்திரை 2019 செவ்வாய் 14:13 | பார்வைகள் : 9001


 உதடுகளை பொலிவாகவும், ஈரப்பதத்துடனும் வைத்திருக்க இரசாயணம் நிறைந்த கிரீம்களை உதட்டிற்கு பயன்படுத்த வேண்டாம். எளிதாக கிடைக்கக்கூடிய கிளிசரின் கொண்டே உதடுகளின் ஆரோக்கியத்தை பாதுகாக்க முடியும். கிளிசரின் கொண்டு உதடுகளை எப்படி பராமரிப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

 
வறண்ட உதட்டிற்கு
 
 
உங்கள் உதடு வறண்டு போய் இருந்தால், ஒரு காட்டனில் கிளிசரின் தொட்டு தூங்க போகும் முன் உதட்டில் தடவி இரவு முழுவதும் விட்டு காலையில் கழுவி விடலாம். இதனால் உதட்டில் இருக்கும் கருமை நிறம் மாறிவிடும். உதடு ஈரப்பதத்துடன் இருக்கும்.
 
மென்மையான உதட்டிற்கு
 
பெரும்பான்மையானவர்களுக்கு சுற்றுச்சூழல் காரணமாகவும் புகைப்பழக்கம் காரணமாகவும் உதட்டின் நிறம் மாறிவிடும். தினமும் உதட்டிற்கு கிளிசரின் தடவி வருவது நல்லது. இது உதட்டை மென்மையாக்கி பிங்க் நிறத்தை கொடுக்கும்.
 
ஈரப்பதத்தை தக்கவைக்க
 
உதடு வறண்டு போயிருந்தால் அரிப்பு, வெடிப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். உதடுகளை ஈரப்பதத்துடன் வைத்திருக்க லிப் பாம் பயன்படுத்தலாம் அல்லது கிளிசரின் பயன்படுத்தலாம். இது உடலை ஹைட்ரேட் செய்யும்.
 
உதடுகளில் வெடிப்பை தடுக்க
 
உதடுகள் வறண்டு போனால் வெடிப்பு ஏற்பட்டு, இரத்த கசிவு ஏற்படும். உதடுகளின் மீது எப்போதுமே தனி அக்கறை செலுத்த வேண்டும். கிளிசரினை உதடுகளில் தடவி வர உதடுகளில் பிளவு ஏற்படாது.
 
இறந்த செல்களை அகற்ற
 
உதடுகளுக்கு தொடர்ச்சியாக கிளிசரின் பயன்படுத்தி வர உதடுகள் மென்மையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். மேலும் உதடுகளில் உள்ள இறந்த செல்கள் அகற்றப்பட்டு பொலிவாக இருக்கும்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்