Paristamil Navigation Paristamil advert login

தலையில் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்....!!

தலையில் புண்கள் ஏற்படுவதற்கான காரணங்களும் தீர்வுகளும்....!!

23 தை 2019 புதன் 10:02 | பார்வைகள் : 8850


நாம் தினமும் பயன்படுத்தும் பொருட்களால், தலையில் புண் உண்டாக காரணமாகி விடுகிறது. இத்தகைய பொருட்கள் அப்படியே ஒரு படலம்  போல் தலையின் தோல் மேல் படர்ந்து விடுவதால் அவை தலைப்புண்களை உண்டாக்கலாம்.
 
கூந்தல் தைலங்கள் மயிர் கால்களை அடைத்து விடுவதால் தலைப்புண் உருவாக வாய்ப்புள்ளது. அழகுக்காக பயன்படுத்தப்படும் கூந்தல்  பாதுகாப்பு பொருட்கள் முறையாக உபயோகப்படுத்தவிட்டால் சில சமயம் அதுவே தலைப்புண் ஏற்பட காரணமாகிவிடும்
 
வேப்ப இலைகள் தோல் மற்றும் சரும ரோகங்களுக்கு சிறந்த நிவாரணி ஆகிறது. இது தோல் வியாதிகளான எஸிமா, சோரியாசிஸ், புழுக்கள்  மற்றும் வார்ட்ஸ் போன்றவற்றிக்கு நல்ல மருந்தாகும். அதே போல் தலைப்புண்களுக்கும் நல்ல தீர்வாகிறது. இதன் ஆன்டிசெப்டிக் மற்றும்  ஆன்டிபாயடிக் குணங்கள் இருப்பதால், தலைபுண்களை விரைவாக ஆற்றிவிடும். 
 
வேப்ப இலைகளை தண்ணீரில் போட்டு கொதிக்க வைத்து அரைத்து விழுதாக்கி, அதை பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். அதே போல் நீருக்கு பதில் நல்ல தேங்காய் எண்ணையையும் பயன்படுத்தலாம். இதை தலையில் தடவி மசாஜ்  செய்து இரவு முழுவதும் அப்படியே ஊறவைத்து, மறுநாள் காலை ஷாம்பு போட்டு கழுவினால் நல்ல பலன் கிடைக்கும்.
 
மருதாணி இயற்கையாகவே தலைமுடியின் ஈரப்பதத்தை பாதுகாக்கவும், தலைப்புண்கள் ஏற்படாமலும் பாதுகாக்க உதவுகிறது. எந்த தலைமுடி பிரச்சனைக்கும் மருதாணியை அரைத்து விழுதாக்கி தடவுவது மிகச்சிறந்த இயற்கையான தீர்வாகும்.
 
சோற்று கற்றாழை சோறுடன் எலுமிச்சை சாறு கலந்து பாதிக்கப்பட்ட இடங்களில் தடவி சிறிது நேரம் ஊறிய பிறகு கழுவி விடவும். சோற்று  கற்றாழை சோற்றுப்பகுதியை எடுத்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் அப்படியே தடவவும். கொஞ்ச நேரம் ஊறிய பிறகு மிதமான சுடுதண்ணிரில்  கழுவவும்.
 
பேக்கிங் சோடா தலைப்புண்களை குறைக்க உதவுகிறது. தலையில் மயிர்கால்கள் அடைப்பட்டிருக்கும் போது பேக்கிங் சோடா தடவி மசாஜ் செய்து கழுவி விட சிக்கிரம் குணமாகும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்