Paristamil Navigation Paristamil advert login

மலட்டுத் தன்மை

மலட்டுத் தன்மை

1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 9426


 

 
ஒரு பெண்ணால் தன் வாழ்நாள் முழுவதும் ஒரு குழந்தையை வயிற்றில் நிரந்தரமாக சுமக்க முடியவில்லை என்பதை மலட்டுத் தன்மை என்று கூறலாம். அதே போல் 35 வயதிற்கு மேல் உள்ள பெண்கள் 6 மாதங்கள் முயன்றும் கர்ப்பமாகவில்லை என்றால், அதையும் கூட மலட்டுத் தன்மை என சொல்லலாம். 
 
ஒரு பெண் கரு தரித்தாலும் கூட, அவளால் கருவை சுமக்க முடியவில்லை என்றாலும் அதனை மலட்டுத் தன்மை என கூறலாம். மலட்டுத் தன்மை என்றால் பிரச்சனையானது பெண்களிடம் தான் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. ஆண் பெண் என இருவருக்கும் இந்த பிரச்சனை ஏற்படலாம். இப்பிரச்சனை மூன்றில் ஒரு பங்கு பெண்களுக்கு ஏற்படுகிறது. 
 
இப்பொழுதெல்லாம் மலட்டுத் தன்மை பிரச்சனை பல பெண்களையும், ஆண்களையும் தாக்குகிறது. அதற்கு காரணம் நாம் வாழும் ஆரோக்கியமற்ற சூழலும், உணவும் என்று கூட சொல்லலாம். மலட்டுத் தன்மை பெண்களிடம் இருந்தால், அதனை கண்டுபிடித்து குணப்படுத்துவது சுலபம். 
 
அதற்கு காரணம் பெண்களுக்கு மலட்டுத் தன்மை ஏற்பட அனைத்து காரணிகளும் பெரும்பாலும் அறியப்பட்டவை தான். கர்ப்பமாக உதவும் அனைத்து உணவுகளையும் உண்ணுங்கள். மேலும் சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி மருத்துவரிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள். அதே போல் கருவளம் மேம்பட உணவுகளை எப்படி உட்கொள்ள வேண்டும் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள். 
 
மலட்டுத் தன்மை ஏற்படுவதற்கு தோராயமாக 15%-18% காரணமாக இருப்பது குழாயில் நோய்கள் இருப்பதால் தான். ஃபாலோபியன் குழலில் ஏற்படும் அடைப்பு தான் இந்த பிரச்னைக்கு முக்கிய காரணம். அதற்கு சில சோதனைகள் செய்து உரிய சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும். வயதுக்கும் மலட்டுத் தன்மைக்கும் நேரடி தொடர்பு உள்ளது. 
 
உடல் வலிமை, எதிர்ப்பு சக்தி, தடுப்பாற்றல் மற்றும் ஹார்மோன் அளவுகள் எல்லாம் வாலிப வயதில் உச்சத்தில் இருக்கும். அதனால் இதனை முக்கியமாக மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆனால் உடலின் வலிமையானது வயது ஏற ஏற குறையத் தொடங்கும். அதனால் மலட்டுத் தன்மை சம்பந்தமான சிகிச்சையை சீக்கிரம் ஆரம்பிப்பது அவசியம். 
 
நல்ல தூக்கம் இல்லாமல் போவதற்கும், மலட்டுத் தன்மைக்கும் சம்பந்தம் இருக்கிறது என்று பல ஆய்வுகள் கூறுகிறது.  இரவு வேளை நீண்ட நேரம் கண் விழித்திருந்தால், ஹார்மோன் அளவுகளில் பல அடிப்படை மாற்றங்கள் ஏற்படும். அதனால் அது மலட்டுத் தன்மையை ஊக்குவிக்கும். 
 
போதிய தூக்கம் இல்லாமல் இருப்பவர்கள் பல உடல்நல கோளாறுகளை சந்திக்கின்றனர் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். கணவன் மனைவி உறவுக்கு இடையே இறுக்கம் ஏற்பட்டாலும் கூட, மலட்டுத் தன்மைக்கு முக்கிய காரணமாக அது அமையும். அதனால் கணவன் மனைவி இரண்டு பேரும் பரஸ்பர அன்புடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். 
 
அவர்களுக்குள் சண்டையோ எந்த வித உரசலோ இருக்கக் கூடாது. இந்த நேரத்தில் தான் ஒருவருக்கு ஒருவர் உடல், மனம் மற்றும் உணர்ச்சி ரீதியாக ஆதரவாக இருக்க வேண்டும். மற்ற வியாதிகளை போல் மலட்டுத்தன்மையையும் குணப்படுத்த முடியும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்