உதட்டின் அழகிற்கு கவனத்தில் கொள்ள வேண்டியவை
20 கார்த்திகை 2018 செவ்வாய் 09:55 | பார்வைகள் : 9563
பெண்களின் முகத்திற்கு அழகு சேர்ப்பதில் உதடுகள் பெரும் பங்கு வகிக்கின்றன. அதனை மிக கவனமாக பாதுகாத்தால் வெடிப்புகள் ஏற்படாமலும், மென்மையாகவும், அழகாகவும் காட்சி தரலாம்.
* உதடுகள் மென்மையாக இருக்க, வெண்ணெயை லேசாகப் பூசி வரலாம்.
* சந்தனத்தை பன்னீரில் குழைத்து உதடுகளில் பூசி, ஊற வைத்து, கழுவி வந்தால் உதடுகள் மென்மையாகும்.
* ரோஜா இதழ்களை பால் விட்டு அரைத்து உதடுகளில் பூசி வந்தால் உதடுகளில் ஏற்படும் வெடிப்புகள் மறையும்.
* பாலாடையை உதடுகளில் தினமும் பூசி வந்தால் வெடிப்பு மறைந்து அழகாக மாறும்.
* வெண்ணெயுடன் தேங்காய் எண்ணெயைக் கலந்து உதடுகளில் தடவி வந்தால் உதடுகள் காய்ந்து போகாமல் இருக்கும்.
* பீட்ரூட்டை துண்டுகளாக்கி அதை உதடுகளின் மேல் லேசாக தேய்த்து வந்தால் உதடுகள் ரோஜா கலரில் மாற்றம் ஏற்படும்.
* பன்னீரை பஞ்சினால் எடுத்து உதடுகளில் தினமும் பூசி வந்தால் உதடுகள் பொலிவாக மாறி விடும்.
* கொத்தமல்லித்தழையின் சாறை உதடுகளில் இரவு நேரத்தில் பூசி வந்தால் உதடுகள் சிவப்பாக மாறி அழகு தரும்.