Paristamil Navigation Paristamil advert login

கருப்பு டீ, காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

கருப்பு டீ, காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகள்

23 புரட்டாசி 2019 திங்கள் 12:55 | பார்வைகள் : 11823


 உலகில் மிகவும் பரவலாக மக்களின் பழக்கத்தில் இருப்பது காபி, டீ இரண்டும்தான். ஊரில் டீ கடைகளை மூடி விட்டால் 90 சதவீதம் மக்கள் சுருண்டே படுத்து விடுவார்கள் எனலாம்.

 
 
 
காபி, டீ நல்லதல்ல, விட்டு விடுங்கள், என்றே பலரும் சொல்லக் கேட்டு இருக்கிறோம். ஆனால் அநேகருக்கு முடிவதில்லை. 3 நாள் சாப்பாடு இல்லாமல் இருந்தாலும் இருப்பார்கள். ஆனால் ஒரு வேளை டீ அல்லது காபி இல்லாவிட்டால் தலைவலி மண்டையினை உடைத்து விடுகின்றது. இப்பொழுது பலர் கருப்பு டீ, கருப்பு காபி, லெமன் டீ என்று வித்தியாசமாகக் குடிக்கத் தொடங்கியுள்ளனர்.
 
கேபின் எனப்படும் பொருளே இந்த காபி, டீயினை நம்மை ஈர்த்து குடிக்க வைக்கின்றது. ஒரு காபியில் (240மிலி) 95 மிகி அளவு கேபின் உள்ளது என்றால் அதே அளவு கருப்பு டீயில் 47 மிகி அளவு கேபின் உள்ளது. இந்த கேபினுக்கு பல நீண்ட கால நோய்களின் பாதிப்பு அபாயத்தினை வெகுவாய் குறைக்கும் தன்மை உண்டு. விளையாட்டுகளில் திறமையைக் கூட்டும் மன நலம், மனக் கூர்மை இவற்றினை அதிகரிக்கச் செய்யும்.
 
நரம்பு மண்டலத்திற்கு ஒரு ஊக்குவிப்பாக அமைகின்றது. 1 கப் காபி, டீ குடித்தால் சுறுசுறுப்பாக இயங்குவது இந்த காரணத்தினால்தான். மறதி நோய், மது அருந்தாதவர்களுக்கு உண்டாகும் கொழுப்பு, கல்லீரல் இவை அனைத்தும் அதிகம் தவிர்க்கப்படுவதும், குறைவதும் நிதான அளவில் காபி, டீ குடிப்பவர்களுக்கு ஏற்படும் நன்மைகள். ஆனால் கேபின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டது.
 
கருப்பு டீ
 
 
கருப்பு டீயினால் நுரையீரல், குடல் புற்று நோய் வளர்ச்சியினை தடுப்பதாகவும் புற்று நோய் செல்களை அழித்து விடுவதாகவும் சமீபத்திய ஆய்வுகள் கூறுகின்றன. பொதுவில் கருப்பு டீ, காபி கேன்சர் செல்களில் இருந்து காக்கும் தன்மை படைத்தது என பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. தொடரும் ஆய்வுகள் உணவுப் பாதை, கல்லீரல், சிறுநீரகம் குடல், மார்பக புற்று நோய்களை கருப்பு டீ மற்றும் காபி குடிப்பதனால் ஏற்படும் நன்மைகளாக குறிப்பிடுகின்றன.
 
*  மேலும் ரத்த குழாய் அடைப்புகளையும் நீக்குகின்றன.
 
* காபி, டீ இரண்டுமே சக்தியை கூட்டுகின்றன.  எடை குறைய உதவுகின்றன. காபிக்கு சில பக்க விளைவுகள் எ.கா, உயர் ரத்த அழுத்தம் போன்றவை குறிப்பிடப்பட்டாலும் அளவான முறையில் இதனைப் பருகினால் நன்மைகளே ஏற்படும். ஆனால் சிலருக்கு கேபின் ஒத்துக் கொள்ளாமல் இருக்கலாம். கேபினை ஒவ்வாமை இருப்பவர்களுக்கு சிறிய அளவு அருந்தியதுமே
 
* படபடப்பு, தலைவலி, அதிக வியர்வை,
 
* தூக்கமின்மை, உடல் அரிப்பு, தொண்டை, நாக்கில் வீக்கம்,
 
* மூச்சு விடுவதில் சிரமம் போன்றவை ஏற்படும்.
 
உங்களுக்கு அலர்ஜி இருக்கிறதா என மருத்துவர் மூலம் பரிசோதித்துக் கொள்ளலாம்.
 
இந்த கேபின் ஒவ்வாமை வயது, பரம்பரை நோய், கல்லீரல் செயல்பாட்டு குறை இவற்றின் காரணமாகவும் ஏற்படலாம். அதிக அளவில் கேபின் எடுத்துக் கொள்பவர்களுக்கு அலர்ஜி போல் அதிக பாதிப்புகள் ஏற்படுகின்றன. காபியோ, டீயோ, பால், சர்க்கரைசேர்த்து அருந்துவதுதான் நம் பழக்கம், ஆனால் கருப்பு காபி, கருப்பு டீ இவற்றில் கலோரி சத்து குறைவு என்பதாலயே இவை அதிகம் பரிந்துரைக்கப் படுகின்றது.
 
கேபின் மிதமான அளவில் மட்டுமே நல்லது. இல்லையெனில் இதற்கு குடி போல் நாம் அடிமையாகி விடுவோம். உடல் நலம் எனும் பொழுது அதில் கழிவுப் பொருள் வெளியேற்றமும் சீராக இருக்க வேண்டியது அவசியம்.
 
பலருக்கு மலச்சிக்கல் இருந்தாலும் அதனை ஒரு பெரிய பிரச்சினையாகவே எடுத்துக் கொள்வதில்லை. ஏன் இந்த பிரச்சினை இருக்கின்றது என்பதனை மருத்துவ ஆலோசனை மூலம் அறிந்து சரி செய்து கொள்ள வேண்டியது அவசியம்.
 
* உணவு முறை, உடற்பயிற்சியின்மை
* நீர் தேவையான அளவு அருந்தாமை
* மருத்துவ காரணம்
 
இப்படி எந்த பிரச்சினையில் நம் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது என்பதை அறிய வேண்டும்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்