Paristamil Navigation Paristamil advert login

சருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்

சருமத்தின் அழகை அதிகரிக்கும் ஆலிவ் ஆயில்

20 புரட்டாசி 2019 வெள்ளி 14:09 | பார்வைகள் : 12977


 ஆலிவ் எண்ணெய் நம் தலை முடி, முகம் உள்ளிட்ட உடலின் அனைத்து பாகங்களையும் அழகாகப் பராமரிக்க பெரிதும் பயன்படுகிறது. இருந்தாலும் நம் நடைமுறை வாழ்க்கையில் இந்த ஆலிவ் ஆயிலை அதிகமாக பயன்படுத்துவது இல்லை.

 
குளிப்பதற்கு முன் முகத்தில் ஆலிவ் ஆயிலுடன், சிறிது வினிகரை கலந்து தடவி ஊற வைத்து பின் வெதுவெதுப்பான தண்ணீரில் குளித்தால் சூரியக் கதிரினால் சருமம் பாதிப்படைவதைத் தடுக்கலாம்.
 
 
ஆலிவ் ஆயிலை தினமும் இரவில் படுக்கும் முன் முகத்தில் தடவி படுத்தால் முகத்தில் இருக்கும் அழுக்குகள் வெளிவருவதோடு, வயதான தோற்றத்தையும் கட்டுப்படுத்தும்.
 
சூரிய ஒளி, மாசு, வறட்சி போன்ற காரணங்களால் ஏற்படும் சரும பாதிப்புகளைத் தடுக்க மாய்ஸ்சரைஸர் முக்கியம். அதற்கு இயற்கை முறையில் ஆலிவ் எண்ணெய் உதவுகிறது. இது சருமத்தை மென்மையாக்கி, சருமத்தை பருக்கள் இல்லாமல் காக்க உதவுகிறது.
 
ஒரு ஸ்பூன் ஆலிவ் எண்ணெயுடன், இரண்டு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். இந்த கலவையை உங்கள் சருமத்தில் நன்றாக அப்ளை செய்து கொஞ்ச நேரம் மசாஜ் செய்து, பின்பு 30 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருக்கவும். பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவவும். இவ்வாறு வாரத்துக்கு இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சரும பிரச்சனைகள் அனைத்தும் சரியாகும்.
 
வறட்சி காரணமாக, பலருக்கும் தலையில் பொடுகுத் தொல்லை ஏற்படும். அவர்களுக்கு கண்டிஷர்தான் சரியான தீர்வு. அதற்கு கெமிக்கல் முறையில் தயாரிக்கப்பட்ட கண்டிஷ்னர்களைக் காட்டிலும், இயற்கை முறையிலான ஆலிவ் எண்ணெயைப் பயன்படுத்தலாம். இது உங்கள் முடியின் வேர்களை பாதிக்காது.
 
குறிப்பாக பொடுகு பிரச்சனையை உடனே சரியாக்கும், முடி நல்ல அடர்த்தியாக மற்றும் நிளமாக வளர ரொம்பவே பயன்படுகிறது.
 
சிலருக்கு சருமம் மிகவும் கருமையடைந்து காணப்படும். இந்த பிரச்சனையை சரி செய்ய, ஒரு கிளீன் பவுலை எடுத்து கொள்ளவும். அவற்றை ஒரு ஸ்பூன் கஸ்துரி மஞ்சள், ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில் மற்றும் இரண்டு ஸ்பூன் தயிர் ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் அப்ளை செயுங்கள், பின்பு 30 நிமிடங்கள் கழித்து சருமத்தை குளிர்ந்த நீரால் கழுவ வேண்டும்.
 
இந்த முறையை வாரத்தில் இரண்டு அல்லது மூன்று முறை செய்து வர சருமத்தில் ஏற்படும் கரும்புள்ளி மற்றும் கருத்திட்டுகள் அனைத்தும் மறைந்துவிடும்.
 
சருமம் பளபளப்பாக மாற ஆலிவ் ஆயில் ரெம்பவே பயன்படுகிறது. இரண்டு துண்டுகள் பப்பாளியை தண்ணீர் சேர்க்காமல் மிக்சியில் அரைத்து, தனியாக வைத்து கொள்ளவும்.
 
இப்பொழுது ஒரு கிண்ணத்தை எடுத்து கொள்ளவும். அவற்றில் ஒரு ஸ்பூன் ஆலிவ் ஆயில்,  இரண்டு ஸ்பூன் தேன் மற்றும் அரைத்து வைத்துள்ள பப்பாளி ஆகியவற்றை ஒன்றாக கலந்து ஒரு பேக் போல் கலந்து கொள்ளவும்.
 
இவற்றை சருமத்தில் அப்ளை செய்து சிறிது நேரம் மசாஜ் செய்யவும், பின்பு 15 முதல் 20 நிமிடங்கள் வரை அப்படியே வைத்திருந்து பின்பு சருமத்தை வெதுவெதுப்பான நீரால் கழுவ வேண்டும். இவ்வாறு வாரத்தில் இரண்டு முறை, இந்த முறையை செய்து வர சருமம் மென்மையாகவும், பொலிவுடனும் காணப்படும்.

9 நாள்கள் முன்னர்

மரண அறிவித்தல்

RAJADURAI

FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI

வயது : 44

இறப்பு : 14 Aug 2025

  • Ecology

    1

  • Live Link

வர்த்தக‌ விளம்பரங்கள்