முகப்பொலிவை அதிகரிக்கும் வாழைப்பழ மசாஜ்
19 ஆவணி 2019 திங்கள் 08:45 | பார்வைகள் : 12941
பருவ கால மாற்றங்கள் சருமத்திற்கு தொந்தரவு தரும். சரும வறட்சி, சரும உதிர்வு ஏற்பட்டு அழகு குறையும். அதிலிருந்து நிவாரணம் பெற பெரும்பாலானோர் கிரீம் வகைகளை நாடுவார்கள். வாழைப்பழத்தையும், பாலையும் பயன்படுத்தி முகப்பொலிவை தக்கவைத்துக்கொள்ளலாம். இவை இரண்டுமே சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை அப்புறப்படுத்தி புதுப்பொலிவு ஏற்படுத்தி கொடுக்கும் தன்மை கொண்டவை. வாழைப்பழத்துடன் பால் கலந்து பேஷியல் கிரீம் தயாரிப்பது பற்றி பார்ப்போம்.
வாழைப்பழத்தை சிறிய துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதனை ஒரு கிண்ணத்தில் போட்டு நன்றாக பிசைய வேண்டும். பின்னர் ஒரு டேபிள்ஸ்பூன் பாலை ஊற்றி நன்றாக பிசைய வேண்டும். அதனை கையில் எடுத்து முகம், கழுத்துப் பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பிறகு அவை உலரும் வரை வைத்திருக்க வேண்டும். அரை மணி நேரம் கழித்து வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவ வேண்டும்.
இதனை வாரத்திற்கு இரண்டு முறை முகத்தில் தடவி வரலாம். தொடர்ந்து இவ்வாறு செய்து வந்தால் சருமம் பளிச்சென்று மின்னும்.


























Bons Plans
Annuaire
Scan