தலை முடியை சீராக்கும் இயற்கை மூலிகைகள்
15 ஆவணி 2019 வியாழன் 05:59 | பார்வைகள் : 9553
முடி, அல்லது சிகை என்பது அடித்தோலில் காணப்படும் மயிர்க்கால்களிலிருந்து வளரும் இழை வடிவமுடைய புரத இழைகளாலான உயரியப் பொருளாகும், முடி வளர்வது பாலூட்டிகளின் ஒரு குறிப்பிடத்தக்கப் பண்பாக உள்ளது.
பல்வேறு வகையான முடிகளைக் (முடி நீக்குதல், முடி ஒப்பனைகள்) குறித்த மனப்பாங்கு பல்வேறு காலகட்டங்களில், கலாச்சாரங்களில் பரவலாக வேறுபட்டுக் காணப்பட்டாலும் முடியானது தனி மனிதனின் நம்பிக்கைகள் அல்லது சமூக நிலையை சுட்டுவதாக அமைந்துள்ளது.
முடி கொட்டாமல் இருக்க- இயற்கை தீர்வுகள்:- சந்தையில் கிடைக்கும் முடி கொட்டுதலைத் தடுக்கும் பொருட்களை பயன்படுத்துவதால் பக்க விளைவுகள் ஏதேனும் உள்ளதா என்ற கேள்வி கள் எப்போதும் இருக்கும். இதை மனதில் வைத்துக்கொண்டு எதையும் பயன்படுத்தாமல் அப்படியே விட்டு விட்டாலும் வேகமாக முடி கழிந்து கொண்டிருப்பவர்களுக்கு அபாயம் நிற்கப் போவ தில்லை. வழுக்கை விழுவதை தடுக்க சிறந்த ஒரே வழி இயற்கையான பாட்டி வைத்தியத்தை மேற் கொள்வதே சிறந்தது.
முடியை அலச வேண்டும்:- எப்போதும் தலை முடியை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். முடி கொட்டுதலுக்கு முக்கிய காரணமான பொடுகு மற்றும் அரிப்பிலிருந்து இது தடுக்கும். முடிக்கு ஷாம்பு போடுவதை தடுக்க வேண்டும். ரசாயனப் பொருட்கள் முடிக்கு கேடு விளைவிக்கும். முடியை வலுவிழக்கச் செய்யும்.
கடுகு எண்ணைய்:- ஒரு கப் கடுகு எண்ணெயை எடுத்து நான்கு டீஸ்பூன் மருதாணி இலைகளுடன் கலக்கவும். இந்த கலவையை நன்கு கொதிக்க வைத்து, பின்னர் வடிகட்டி ஒரு குப்பியில் நிரப்பி வைத்துக் கொள்ளவும். இந்த எண்ணெயை வைத்துத்தலையை நன்கு மசாஜ் செய்து கொண்டால் முடி ஆரோக்கியத்தை பெறும்.
வெந்தயம்:- சில டீஸ்பூன் வெந்தயத்தை நன்கு அரைத்து அதை ஒரு கப் தண்ணீரில் கலந்து கொள்ளவும், இந்த கரைசலை தலைமுடியில் நன்கு தடவி 40 நிமிடங்களுக்கு ஊற வைத்து பின் தண்ணீரில் முடியை அலசி விட வேண்டும். இதை தொடர்ந்து ஒரு மாத காலம் செய்து வந்தால் முடி கழிதல் குறையும்.
மசாஜ்:- முடியை குளிர்ந்த நீரில் அலசி, தலை முடியையும், ஸ்கால்ப்பையும் கைகளால் நன்கு கோதி விட்டு மசாஜ் செய்ய வேண்டும். இது தலையில் ரத்த ஓட்டத்தை தூண்டி முடி கொட்டு வதை தடுக்கும்.
வெங்காயம்:- தலையில் வழுக்கை விழ ஆரம்பித்து விட்டதா? கவலையை விடுங்கள். பச்சை வெங் காயம் ஒன்றை எடுத்துக்கொண்டு, வழுக்கை விழும் இடத்தில், தோல் சிவக்கும் வரை தேய்த்து பின்னர் அங்கே தேனை தட வினால், முடி வளர்ச்சிக்கு இந்த முறை ஒரு தூண்டுதலாக இருக்கும்.
முட்டை:- முட்டையின் மஞ்சள் கரு மற்றும் தேனை ஒன்றாக கலந்து, அந்த கலவையை தலையில் தடவி மசாஜ் செய்தாலும் கழிதல் குறையும். இந்த கலவை தலையில் நன்கு உட்காரும் வரை சுமார் அரை மணி நேரத்துக்கு ஊற வைத்து, பின் தண்ணீரில் அலசி விடவும்.
இயற்கை ஷாம்பு:- 5 டீஸ்பூன் தயிர், 1 டீஸ்பூன் எலு மிச்சை சாறு மற்றும் 2 டீஸ்பூன் பாசிப்பயறு மாவை ஒன்றாக கலந்து, அதனை தலைக்கு தேய்த்து, ஊற வைத்து, நீரில் அலசினால், முடி கழிதல் நின்று நன்கு ஆரோக் கியமாக வளரும்.
தேங்காய் எண்ணெய்:- ஒரு கப் தேங்காய் எண்ணெயைசூடேற்றி, காய வைத்த நெல்லிக் கனியை அதில் போட்டு, கொதிக்க விட்டு வடிகட்டி அதனை ஒரு பாட்டிலில் ஊற்றி, தினமும் தலையிலும், தலை முடியிலும் நன்கு மசாஜ் செய்தால் முடி கொட்டு தலின் அளவு கண்டிப்பாக குறையும்.
நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு:- நெல்லிக்காய் மற்றும் எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முடிக்கு தேய்த்து மசாஜ் செய்து குளித்தால், முடி உதிர்வை குறைக்கலாம். இது முடி வளர்வதற்கும் ஒரு சிறந்த தூண்டுகோலாக இருக்கும்.
பசலைக்கீரை:- தினமும் ஒரு கப் பசலைக்கீரை சாற்றை பருகினால் முடிகொட்டுவதை தவிர்க்கலாம்.
கொத்தமல்லி:- பச்சை கொத்தமல்லியை வாங்கி, அதை நன்றாக அரைத்து - 1 கப் அளவு சாறு எடுத்து, முடியை நன்கு அலசுங்கள், அது வும் ஒரு தீர்வே.
தேங்காய்ப் பால்:- தலையை தேங்காய் பாலால் அலசுவதும் கூட முடி கழிதலுக்கு உடனடி நிவாரணி.
கறுகறு கூந்தலுக்கு:- சுத்தமான தேங்காய் எண்ணெயில் கறிவேப்பிலைத் துளிர் சேர்த்து கொதிக்க வைத்து கூந்தலில் தடவிக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு முறை எண்ணெய் தடவும் போதும் மண்டை ஓட்டுப் பகுதித்தோலை விரல் நுனியால் மசாஜ் செய்யத் தவறாதீர்கள். ஷாம்பு, சோப்பு வகைகளுக்கு ‘டாட்டா’ சொல்லுங்கள். அதற்குப் பதில் சிகைக்காய், அரப்பு, பாசிப்பருப்பு மாவு போன்ற இயற்கையானவற்றைத் தேர்ந்தெடுங்கள்.