இளநீர் குடிப்பதால் ஏற்படும் பலன்கள்
12 ஆவணி 2019 திங்கள் 10:40 | பார்வைகள் : 9223
காலையில் வெறும் வயிற்றில் இளநீரை முதலில் குடிப்பது பல வழிகளில் உதவும். இளநீரில் லாரிக் அமிலம் உள்ளது, இது உங்களின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது, மேலும் உடலின் வளர்ச்சிதை மாற்றத்தை அதிகரிக்கவும், எடை குறைப்பிற்கும் உதவுகிறது. கர்ப்பிணி பெண்கள் உடலில் நீர்ச்சத்தை தக்கவைக்கவும், மலச்சிக்கலை குணப்படுத்தவும் உதவும். மேலும் கர்ப்பகாலத்தில் பெண்களுக்கு காலை நேரத்தில் ஏற்படும் நெஞ்செரிச்சலை குணப்படுத்த உதவுகிறது.
இளநீர்
உடற்பயிற்சிக்கு முன்னர் இளநீர் குடிப்பது உடலில் நீரேற்றத்தை அதிகரிக்கவும், ஆற்றலை அதிகரிக்கவும் பயன்படுகிறது. உடற்பயிற்சிக்கு பின்னர் இளநீர் குடிப்பது தீவிர உடற்பயிற்சியால் இழந்த எலெக்ட்ரோலைட்டுகளின் இழப்பை சமன் செய்கிறது. இளநீர் குடிப்பது சோர்வை எதிர்த்துப் போராட உதவுகிறது மற்றும் சிறந்த ஆற்றல் அதிகரிக்கும் பானங்களில் ஒன்றாகும்.
உணவுக்கு முன் புத்துணர்ச்சியூட்டும் இளநீரைக் குடிப்பது, உங்கள் உணவை முழுமையாக்குகிறது, இதனால் அதிகப்படியான உணவு சாப்பிடுவதைத் தடுக்கிறது. இது கலோரிகளில் குறைவாக இருப்பதால் செரிமானத்தை எளிதாக்குகிறது. உணவுக்கு பின் இதனைக் குடிப்பது வயிற்றில் வீக்கத்தை ஏற்படுவதைத் தடுக்கிறது. தொடர்ச்சியாக இளநீரைக் குடிப்பது உடலில் எலெக்ட்ரோலைட்டுகள் அளவை சமநிலையில் வைத்திருக்க உதவுகிறது.
தூங்க செல்வதற்கு முன் சிறிது இளநீர் குடிப்பது மனஅழுத்தத்தை குறைக்கவும், மன அமைதியை ஏற்படுத்தவும் உதவுகிறது. தூங்கும் முன்னர் இளநீர் குடிப்பது உடலில் இருக்கும் அனைத்து நச்சுகளையும் வெளியேற்றவும், உங்கள் சிறுநீர் பாதையை சுத்தப்படுத்தவும் உதவும். இது உங்களை நோய்த்தொற்றில் இருந்து பாதுகாக்கவும், சிறுநீரக பிரச்சினைகளில் இருந்தும் உங்களை பாதுகாக்கிறது.