காலையில் இதை சாப்பிட்டு வாங்க...! பளபளப்பாக மாறிடுவீங்க ..!

5 ஆவணி 2019 திங்கள் 05:41 | பார்வைகள் : 11403
எங்கும் கலப்பிடம்... எதிலும் கலப்படம் என்பதற்கு ஏற்ப இன்று நாம் உண்ணும் உணவு அனைத்தும் கலைப்பிட உணவாகவே உள்ளது. அதனால் ஏற்படக்கூடிய விளைவு தான் இன்று இளம் வயதிலேயே சர்க்கரை நோய், ரத்தக் கொதிப்பு, கண்பார்வை குறைபாடு, நோய் எதிர்ப்பு தன்மை குறைவு, வயதுக்கு மீறிய உடல் பருமன், சிறுவயதிலேயே பூ பெயர்தல் என சொல்லிக்கொண்டே போகலாம்.
இருந்தாலும் இதற்கு பதிலாக நம் உடலுக்கு தேவையான ஆரோக்கிய உணவை உண்பதில் மிக மிக குறைந்த அளவிலேயே ஆர்வம் காண்பிக்கின்றனர் இன்றைய இளசுகள்... காரணம் அவர்களுடைய வேலை பளு, நேரமின்மை மற்றும் மாறிவரும் கலாச்சாரத்திற்கு ஏற்ப ஃபர்ஸ்ட் ஃபுட் என அனைத்தையும் உண்கின்றனர். ஆனால் விளைவு ஆரோக்கிய பாதிப்பு தான். இதனை கொஞ்சமாவது குறைக்க காலை சிற்றுண்டிக்கு பதிலாக பழங்களை கூட எடுத்துக்கொள்ளலாம்.
அந்த வகையில் மாதுளை பழம் எடுத்துக் கொண்டால் இதன் மூலம் ரத்தம் சுத்தமாகும், புதிய ரத்தம் சுரக்கும், உடல் பலம் பெறும், எலும்புகள் பற்களில் ஏற்படும் நோயை குணமாக்கும், மலச்சிக்கலைத் தவிர்க்கும்.
தினமும் பேரிச்சம் பழத்தை சாப்பிட்டு வந்தால் புதிய ரத்தம் சுரக்கும், உடல் பலம் பெறும், தோல்களை வழுவழுப்பாக்கும், நரம்புத்தளர்ச்சியை தடுக்கும்.
திராட்சையை எடுத்துக்கொண்டால் நல்ல பசி உண்டாகும், வயிற்றுப் புண் குணமாகும், இது போன்ற பழ வகைகளை காலை நேரத்தில் உண்டு வந்தால் அந்த நாள் முழுக்க தேவையான எனர்ஜி கிடைப்பதுடன் நம் உடலுக்கு தேவையான சத்து கிடைத்துவிடும். முடிந்த அளவிற்கு வெளி உணவுகளை தவிர்த்து, வீட்டில் செய்யப்படும் ஆரோக்கியமான ஊட்டச்சத்தான உணவினை எடுத்துக் கொண்டாலே போதுமானது.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1