கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்கள் எவை தெரியுமா...?

21 ஆடி 2019 ஞாயிறு 04:46 | பார்வைகள் : 12843
நெல்லிக்காய், கடுக்காய், தான்றிக்காய் ஆகியவற்றை அரைத்து தேங்காய்ப் பாலுடன் கலந்து தலையில் தடவி 1/2 மணி நேரம் ஊறவைத்து குளிக்க வேண்டும். இவ்வாறு செய்து வந்தால் முடி நன்கு வளர்வதோடு, மயிர்கால்களுக்கு நன்கு வலுப்பெறும்.
தலைமுடி நன்றாக வளர கற்றாழைச் சாறில் எண்ணெய் கலந்து தலையில் தேய்க்கலாம். இப்படி செய்து வந்தால் அடர்த்தியாகவும் வளரும். தலையும் குளிர்ச்சியாக இருக்கும்.
வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில் பேக் போல போட்டு ஊறிய பிறகு தலைக்கு குளித்தால் தலை முடி செழித்து வளரும்.
கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4, இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன் தயிர் சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால் கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன் வளரும்.
ஐந்து இதழ்கள் உள்ள செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணெய்யில் காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத் தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக வளரும்.
கறிவேப்பிலை அல்லது வெந்தயத்தைப் அரைத்து பொடி செய்து தேங்காய் எண்ணெயில் ஊறவைத்து ஒரு வாரத்திற்குப் பிறகு தினமும் தேய்த்து வந்தால் முடி உதிர்வது நிற்கும். தேங்காய் எண்ணெய்யில் காரட், எலுமிச்சம் பழச்சாறு கலந்து காய்ச்சி தலையில் தேய்த்தாலும் முடி நன்கு வளரும்.
கூந்தல் வளர்ச்சியை அதிகரிக்கும் பொருட்களில் முக்கியமானது விளக்கெண்ணெய். ஆகவே வாரம் 2 முறை விளக்கெண்ணெயை தடவி மசாஜ் செய்து குளித்தால், கூந்தல் உதிர்தல் குறைந்து, அதன் வளர்ச்சி அதிகரிக்கும்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1