Paristamil Navigation Paristamil advert login

கூந்தல் பிரச்சனைகளை தடுக்கும் முட்டை மசாஜ்

கூந்தல் பிரச்சனைகளை தடுக்கும் முட்டை மசாஜ்

6 ஆனி 2018 புதன் 11:24 | பார்வைகள் : 9471


 முடியின் அடர்த்தியை அதிகரிக்க, சுருள்களை குறைக்க, சொரசொரப்பை குறைக்க, முடி உதிர்வை தடுக்க முட்டையை கொண்டு கூந்தலுக்கு மசாஜ் செய்யுங்கள்.

 
கூந்தல் பிரச்சனைகளை தடுக்கும் முட்டை மசாஜ்
தேவையான பொருட்கள்:
 
முட்டைகள் 
எக்ஸ்ட்ராவெர்ஜின் ஆலிவ் எண்ணெய் 
 
இரண்டு முட்டைகளை எடுத்து அதிலிருந்து மஞ்சள் கருவை மட்டும் தனியாக எடுங்கள். பின் நுரை வரும் வரை மஞ்சள் கருவை நன்றாக அடித்துக் கொள்ளுங்கள். அதனுடன் 2 டீஸ்பூன் எக்ஸ்ட்ரா வெர்ஜின் ஆலிவ் எண்ணெயை சேர்த்து நன்றாக கலக்குங்கள். கலவை அடர்த்தியாக வருவதற்கு அதனை 4 முதல் 5 நிமிடங்கள் வரை நன்றாக அடிக்கவும். இதோ, உங்கள் தலை முடிக்கான மாஸ்க் தயார்.
 
 
 
இந்த கலவையை தலை முடியில் தடவுவதற்கு முன்பாக, தலை முடியை மிதமான ஷாம்புவை கொண்டு நன்றாக அலசிக் கொள்ளுங்கள். தலை முடி ஈரமாக இருக்கும் போது, இந்த கலவையை முடிகளின் வேர்கள், தலைச் சருமம் மற்றும் நுனிகளில் படும்படி தடவுங்கள். இப்போது தலையில் ஷவர் கேப் அணிந்து கொண்டு 30 நிமிடங்களுக்கு அப்படியே விட்டு விடுங்கள்.
 
அதன் பின் சாதாரண ஷாம்புவை கொண்டு தலையை அலசி விடுங்கள். முட்டையில் உள்ள புரதம் உங்கள் முடியை திடமாகவும் மென்மையாகவும் மாற்ற உதவும். அதே போல் ஆலிவ் எண்ணெய் உங்கள் முடிக்கு நீர்ச்சத்தை அளித்து ஒரு சிறந்த கண்டிஷனராக செயல்படும். இதை வாரம் ஒரு முறை போடுவதன் மூலம் முடி உதிர்வது குறைந்து மீண்டும் வளர தொடங்கும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்