வெயிலில் இருந்து சருமத்தை பாதுகாக்கும் இயற்கை வழிகள்
26 சித்திரை 2018 வியாழன் 17:48 | பார்வைகள் : 10076
இரவில் சிறிதளவு வெந்தயத்தைத் தண்ணீரில் ஊறவைக்கவும். காலையில் பாலக்கீரையை அரைத்து, அதனுடன் ஊறவைத்த வெந்தயத்தைச் சேர்த்து, தலை முழுவதும் அப்ளை செய்துவிட்டு குளிக்கவும். இதன்மூலம் தலை குளிர்ச்சியாக இருக்கும்.
இயற்கையாகக் கிடைக்கும் கற்றாழையின் நடுவில் உள்ள ஜெல்களை எடுத்துக்கொள்ளவும். அதில், தக்காளி சாற்றையும் சிறிதளவு தயிரையும் சேர்த்து கலவையாக்கவும். பின்னர், அதை முகத்தில் பேக் போன்று அப்ளை செய்துவந்தால், முகப்பொலிவு ஏற்படும்.
தக்காளியை அரைத்து அதை ஐஸ்கியூப்பில் ஊற்றி, பிரிட்ஜில் வைத்துவிடவும். சிறிது நேரம் கழித்து, அந்தக் கட்டியை எடுத்து, முகத்தில் மசாஜ் செய்யவும். முகத்தில் உள்ள டேன் மறையும். தக்காளி சாறு இயற்கையாகவே டேன்களை நீக்கும் குணம் கொண்டது. எனவே, அதனை நார்மலாகத் தோளிலும் அப்ளை செய்யலாம். இது பயன்படுத்திய சில நாள்களிலேயே நல்ல ரிசல்ட் கொடுக்கும்.
பயித்தம்பருப்பைச் சிறிதளவு ஊறவைக்கவும். பின்னர், அதனுடன் வெட்டிவேர், கஸ்தூரி மஞ்சள், ரோஸ் வாட்டர், சிறிதளவு காய்ச்சாத பால் போன்றவற்றை சேர்த்துக்கொள்ளவும். இந்தக் கலவையைச் சோப்பாகப் பயன்படுத்தலாம். தொடர்ந்து இதைப் பயன்படுத்த சரும நோய்கள் நீங்கி, சருமம் புத்துணர்ச்சியாக இருக்கும்.
வெயிலில் போகும்போது ஐ ஷேடோ போடுவதைக் குறைத்துக்கொள்ளவும். வியர்வையோடு சேரும்போது, அதன் ஈரப்பதம் கண்களைச் சுற்றிலும் பரவி, அழகைக் கெடுக்கும்; சருமத்தையும் பாதிக்கும். ஐ கர்லெர் மூலம் கண் இமைகளைத் திருத்தி, கண்களை அழகாகக் காட்டலாம். வாட்டர்ஃப்ரூப்பும் பயன்படுத்தலாம்.
வெயில் காலத்தில் லிப் கிளாஸ் போடக் கூடாது. ஏனெனில், இது உதடுகளை வறண்டுபோகச் செய்து, கருமை நிறத்துக்கு மாற்றிவிடும். தரமான அதிக எஸ்.பி.எஃப் ( SPF) லிப் பாம் பயன்படுத்தலாம்.