Paristamil Navigation Paristamil advert login

சருமத்தை பாதுகாக்கும் சிவப்பு சந்தனம் பேஸ் பேக்

சருமத்தை பாதுகாக்கும் சிவப்பு சந்தனம் பேஸ் பேக்

23 பங்குனி 2018 வெள்ளி 10:33 | பார்வைகள் : 13007


 அனைத்து விதமான சரும பிரச்சனைகளையும் தீர்க்கும் சக்தி கொண்டது சிவப்பு சந்தனம். இதை தினமும் பயன்படுத்தி வந்தால் சருமத்தில் வியக்கத்தகு மாற்றங்கள் ஏற்படுவதை காணலாம். இன்று சிவப்பு சந்தனத்தை எதனுடன் சேர்த்து பேக் போட்டால் என்ன சரும பிரச்சனைகள் தீரும் என்று பார்க்கலாம்.
 
* வறண்ட சருமத்திற்கு சிவப்பு சந்தனம் மிகவும் நல்லது. தேங்காய் எண்ணெய் சரும பிரச்சனைகளை எதிர்த்து போராடும். சிவப்பு சந்தனத்தில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் சேர்த்து நன்றாக கலந்து முகத்தில் தடவி வந்தால் சில நாட்களில் நல்ல மாற்றம் ஏற்படுவதை காணலாம்.
 
* பப்பாளி பழம் சருமத்தை தூய்மையாக்கும். பப்பாளி பழத்தை மசித்து அதில் சிவப்பு சந்தனத்தை சேர்த்து கலந்து முகத்தில் போட்டு வந்தால் சருமத்தில் உள்ள இறந்த செல்கள் அகன்று விடும். இந்த பேஸ் பேக்கை தினமும் போட்டுக்கொள்ளலாம்.
 
 
 
* பாதாம் ஆயில், தேங்காய் எண்ணெய், சிவப்பு சந்தன பவுடர் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவி விடவும். இந்த பேக் சருமத்தை பொலிவாக்கும்.
 
* சரும பிரச்சனைகளை போக்க ஆரஞ்சு தோல் பவுடர் 1 டீஸ்பூன், சிவப்பு சந்தன பவுடருடன் கலந்து அதில் ரோஸ்வாட்டர் ஊற்றி பேஸ்ட் போல் செய்து முகத்தில் தடவி 20 நிமிடம் கழித்து கழுவி விடவும்.
 
* சிவப்பு சத்தனம் பவுடர், வேப்பிலை பவுடர் சமஅளவில் எடுத்து கலந்து அதில் ரோஸ் வாட்டர் கலந்து முகத்தில் தடவி 15 நிமிடம் கழித்து கழுவி விடவும். இந்த பேக் பருக்கள், பருவால் வரும் தழும்பு, கரும்புள்ளிகளை நீக்கும். 
 
* வறண்ட சருமம் உள்ளவர்கள் சிவப்பு சந்தனத்துடன் பால், தேன் சேர்த்து கலந்து முகத்தில் போட்டு 15 நிமிடங்கள் கழித்து கழுவி விடவும். 
 

வர்த்தக‌ விளம்பரங்கள்