Paristamil Navigation Paristamil advert login

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை ஜெல்

கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் கற்றாழை ஜெல்

6 பங்குனி 2018 செவ்வாய் 10:56 | பார்வைகள் : 9104


 அழகுக்கு பயன்படுத்தப்படும் பொருட்களில் முக்கிய இடம் கற்றாழைக்கு உள்ளது. இயற்கையாக கிடைக்கும் காற்றாழை ஜெல்லை கொண்டு கூந்தலுக்கு மாஸ்க் போட்டு வந்தால் முடி பளபளக்கும், பட்டுப்போன்ற மென்மையான கூந்தலையும் பெறலாம். கற்றாழையானது கூந்தலுக்கு இயற்கை கண்டிஷனராக பயன்படுகின்றது. ரசாயனம் கலந்த செயற்கை ஷாம்புக்களை தவிர்த்து இயற்கையான முறைக்கு மாறினால் கூந்தலுக்கு மட்டுமின்றி உடலும் நலம் பெறும்.

 
தொடர்ந்து கற்றாழை ஜெல்லை கூந்தலுக்கு பயன்படுத்தி வந்தால் கூந்தலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கின்றன. இதனால் கூந்தல் பாதுகாக்கப்படுகின்றது. கூந்தலுக்கு தேவையான விட்டமின்கள், மினரல்கள் கற்றாழையில் இருந்து கிடைப்பதால் கூந்தலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது. சரியான பிஎச் அளவு கூந்தலுக்கு கிடைப்பதோடு, நீளமான கூந்தலை பெறலாம்.
 
காற்று மற்றும் வெயில் காரணமாக கூந்தல் வறட்சி அடைவதோடு, கூந்தலின் முனை வெடித்து விடுகின்றது. ஆனால் தொடர்ந்து கற்றாழை ஜெல்லை பயன்படுத்தி வரும்போது மாசுவில் இருந்து பாதுகாப்பதோடு கேசம் உடைவதையும் தடுக்கின்றது.கற்றாழை ஜெல் முடி உதிர்வை தடுத்து கூந்தலை வலுவுடையதாக்குகின்றது. பொடுகு, மாசு உள்ளிட்டவற்றில் இருந்து கூந்தல் பாதுகாக்கப்படுவதால் முடி உதிர்வு என்ற விஷயத்திற்கே இடமின்றி போகின்றது. 
 
 
 
* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் பால் சேர்த்து கலந்து தலைக்கு தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.
 
* கற்றாழை ஜெல்லுடன் தேங்காய் எண்ணெய் சேர்த்து ஸ்கால்ப்பில் தடவி மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து குளித்தால் கூந்தல் பொலிவோடு இருப்பதோடு, முடியின் வளர்ச்சியும் அதிகரிக்கும்.
 
* கற்றாழை ஜெல்லை மட்டும் ஸ்கால்ப் மற்றும் முடியில் தடவி 10 நிமிடம் கழித்து குளித்தால் மயிர்கால்கள் வலிமையடையும்.
 
* கற்றாழையை தொடர்ந்து முகத்தில் தடவி மசாஜ் செய்து வந்தால் கரும்புள்ளிகள் நீங்கி முகம் பளபளக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்