Paristamil Navigation Paristamil advert login

உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு

உடல் எடையை குறைக்க உதவும் கொள்ளு

26 மாசி 2018 திங்கள் 05:48 | பார்வைகள் : 10543


 கொள்ளுப் பருப்பை ஊற வைத்து, அந்த நீரை அருந்தினால் உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறிவிடும். அதேபோல் கொழுப்புத் தன்மை எனப்படும் ஊளைச்சதையை குறைக்கும் சக்தியும் கொள்ளுப் பருப்புக்கு உண்டு. மேலும் இதில் அதிகளவு மாவுச்சத்து உள்ளது. கொள்ளுப் பருப்பை ஊற வைத்தும் சாப்பிடலாம் வறுத்தும் சாப்பிடலாம்.

 
கொள்ளை நீரிலிட்டு கொதிக்க வைத்து அந்நீரை அருந்த ஜலதோஷம் குணமாகும். உடல் உறுப்புக்களைப் பலப்படுத்தும். வெள்ளைப் போக்கைக் கட்டுப்படுத்துவதுடன் மாதாந்திர ஒழுக்கை சரிப்படுத்தும்.பிரசவ அழுக்கை வெளியேற்றும்.
 
 
 
* கொள்ளில் மற்ற பருப்புகளை விட அதிகளவு இரும்புச்சத்து உள்ளது. இதனால் மாதவிடாய் பிரச்சனைகளுக்கு மிகவும் நல்லது.
 
* இது பல வகையான நோய்களை உடலில் குணப்படுத்துகிறது.
 
* இது கொஞ்சம் உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பது உண்மை.
 
* இரவு முழுவதும் ஊறவைத்து கொஞ்சம் தண்ணீர் அதிகமாக சேர்த்து ஊறவைத்து காலையில் அந்த தண்ணீரை மட்டும் எடுத்து அப்படியே வெறும் வயிற்றில் 1 அல்லது 1 1/2 கிளாஸ் குடிங்க.
 
* அந்த தண்ணீரிலேயே அந்த கொள்ளை போட்டு நன்றாக அரைத்து பேஸ்ட் செய்து, துவையல் மாதிரியும் சாப்பிடலாம்.
 
* ஊறவைத்த கொள்ளை எப்படி வேண்டுமானாலும் சமைத்து சாப்பிடலாம். மிளகு, சீரகம் சேர்த்த ரசம் மிகவும் நல்லது.
 
* காலையில் வெறும் வயிற்றில் ஊறவைத்த நீரை லேசாக சூடு செய்து குடித்தல் மற்ற வழிகளை விட உடல் இளைக்க அதிகம் உதவும்.
 
* உடலுக்கு சூடு ஏற்படுத்தும் என்பதால்,முதன் முதலில் கொஞ்சமாக சாப்பிட்டு பார்த்துவிட்டு பிறகு வாரம் ஒரு முறையோ அல்லது உங்கள் வசதிக்கேற்ற மாதிரி தொடரலாம்.
 
சாப்பாட்டில் அடிக்கடி கொள்ளு சேர்த்துக் கொள்வது உடல் எடையை குறைக்கும். அதை விட ராத்திரி  ஒரு ஸ்பூன் கொள்ளு போதும் 1 கிளாஸ் தண்ணீருக்கு. கொள்ளு எடுத்து தண்ணீரில் ஊற வைத்து காலையில் எழுந்தவுடன் அதை சாப்பிட்டு விடுங்கள். இது நிச்சயம் எடையை குறைக்கும் என்கிறார்கள்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்