Paristamil Navigation Paristamil advert login

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தேங்காய் தண்ணீர்

உயர் இரத்த அழுத்தத்தை குறைக்கும் தேங்காய் தண்ணீர்

8 மாசி 2018 வியாழன் 10:38 | பார்வைகள் : 9397


 தேங்காய் தண்ணீர் மிகவும் சுவையாக இருப்பது மட்டுமின்றி, அதில் பல ஆரோக்கியமான சத்துக்களும் நிறைந்துள்ளது. எனவே காலையில் தொடர்ந்து தேங்காய் தண்ணீர் குடித்து வருவதால் கிடைக்கும் நன்மைகளை தெரிந்துக் கொள்வோம்.

 
நம் உடலின் நோயெதிர்ப்பு சக்தி அதிகரித்து, சிறுநீர் பாதை தொற்றுக்கள், ஈறு நோய்களை ஏற்படுத்தும் பாக்டீரியாக்கள் மற்றும் சளி, காய்ச்சல், இருமலை உண்டாக்கும் வைரஸ்களை அழித்தும் வெளியேற்றும்.
 
தினமும் ஒரு கப் தேங்காய் தண்ணீர் குடித்து வந்தால் நம் உடலின் நீர்ச்சத்து அதிகரித்து உடல் வறட்சி அடையாது.
 
தேங்காய் நீர் பசி உணர்வை கட்டுப்படுத்தும். எனவே இதை எவ்வளவு குடித்தாலும் நம் உடலில் கொழுப்புகள் மற்றும் உடல் எடையை அதிகரிக்காமல் தடுக்கும்.
 
செரிமான பிரச்சனை உள்ளவர்கள் தொடர்ந்து 7 நாட்கள் தேங்காய் நீரை குடித்து வந்தால் செரிமானக் கோளாறுகள் மற்றும் வாய்வு தொல்லைகள் வராது.
 
தைராய்டு பிரச்சனை உள்ளவர்கள் தினமும் தேங்காய் தண்ணீர் குடித்தால், அது உடலின் ஆற்றல் மற்றும் தைராய்டு ஹார்மோன்களின் உற்பத்தியை அதிகரித்து தைராய்டு சுரப்பியின் செயல்பாட்டை சீராக்குகிறது.
 
உயர் ரத்த அழுத்தம் பிரச்சனை உள்ளவர்கள் தினசரி காலையில் தேங்காய் நீர் குடித்து வந்தால், அது உடலின் எலெக்ரோ லைட்டுக்களை சீராக்கி உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கும்.
 

Random Image

வர்த்தக‌ விளம்பரங்கள்