பெண்ணுக்கு குழந்தை உருவாகும் நேரம் தெரியுமா?
1 தை 2023 ஞாயிறு 17:00 | பார்வைகள் : 8502
ஆணின் உயிரணுவும், பெண்ணின் கருமுட்டையும் இணையும்போது கரு உருவாகி, அது தாயின் வயிற்றில் வளர்ந்து, பத்தாவது மாதத்தில் குழந்தையாக வெளிவருகிறது..
* பெண்ணின் கருப்பை வாயுக்குள் செலுத்தப்பட்ட விந்தணு 48 முதல் 72 மணி நேரம் வரை உயிருடன் இருக்கும். அதேநேரம், பெண்ணின்கருப்பையில் இருந்து வெளிவரும் கருமுட்டை 24 மணி நேரம்தான் உயிருடன் இருக்கும்.
* கருமுட்டை வெளியான 24 மணி நேரத்திற்குள், அதை ஆணின் உயிரணு சந்தித்து இணைந்து கொண்டால்தான் ஒரு பெண் கர்ப்பம் தரிக்க முடியும்.
* இதனால், கரு முட்டை எப்போது வெளியாகிறது? என்ற ஆர்வமான கேள்வி எழுகிறது. மாதவிலக்கு நின்ற 10 முதல் 20 நாட்களில் ஏதேனும் ஒரு நாளில் கருமுட்டை வெளிவரலாம். இந்த காலக்கணக்கு, மாதவிலக்கு சுழற்சி சரியாக உள்ள பெண்களுக்கு மட்டுமே பொருந்தும்.