சரும பிரச்சனைகள் வராமல் தடுக்கும் பயனுள்ள தகவல்கள்

21 மார்கழி 2017 வியாழன் 16:06 | பார்வைகள் : 16133
சரும பிரச்சனைகளான முகப்பரு, வறட்சியான சருமம், கரும்புள்ளிகள், பொலிவிழந்த முகம், சரும சுருக்கம் போன்றவற்றில் இருந்து விலகி இருக்க சில அழகு குறிப்புக்களை பார்க்கலாம்.
முகத்தில் கண்கள் மற்றும் வாய் பகுதியைச் சுற்றி தான் விரைவில் சுருக்கங்கள் வரும். இதனைத் தவிர்க்க தினமும் இரவில் படுக்கும் முன் ஏதேனும் ஒரு எண்ணெய் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்து வர வேண்டும் என தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருக்க நீர்ச்சத்து மிகவும் இன்றியமையாதது. சரும செல்கள் புத்துணர்ச்சியுடன் இருந்தால் தான் முகம் பொலிவோடு இருக்கும். அதற்கு தினமும் போதுமான அளவில் தண்ணீர் குடிப்பதோடு, சருமத்தின் வெளிப்பகுதி வறட்சியடையாமல் இருக்க மாய்ஸ்சுரைசர், லோசன் போன்றவற்றை தினமும் பயன்படுத்த வேண்டும் என நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
பெரும்பாலான தோல் நிபுணர்கள் மிகவும் சூடான நீரில் குளிப்பதைத் தவிர்க்குமாறு கூறுகின்றனர். சுடுநீரில் குளிப்பதால், சருமத்தில் உள்ள எண்ணெய் பசை முழுமையாக வெளியேறி, சரும வறட்சி அதிகரிக்கும். வேண்டுமானால் வெதுவெதுப்பான நீரில் குளிக்கலாம்.
கண் விளிம்புகளுக்கு நல்ல பாதுகாப்பை வழங்க வேண்டும். அதற்கு வெளியே வெயிலில் செல்லும் போது, சன் க்ளாஸ் அணிந்து செல்வதோடு, கண்களை கடுமையாக தேய்ப்பதைத் தவிர்க்க வேண்டும். கண்களை அதிகமாக தேய்த்தால், அதனால் கருவளையங்கள் மற்றும் சுருக்கங்கள் வர வாய்ப்புகள் அதிகம் உள்ளது என்று தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
சருமத்திற்கு அடுத்தப்படியாக உதடுகள் தான் அதிகம் வறட்சியடையும். உதடுகள் வறட்சியுடன் இருந்தால், அது தோற்றத்தை அசிங்கமாக வெளிக்காட்டும். எனவே தினமும் உதட்டிற்கு லிப் பாம் அல்லது தேங்காய் எண்ணெயை தடவி வாருங்கள்.
சருமம் ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமானால், ஸ்டார்ச் உணவுகள், எண்ணெய் பசை உணவுகளைத் தவிர்த்து, ஒமேகா-3 ஃபேட்டி அமிலங்கள் மற்றும் புரோட்டீன் நிறைந்த உணவுகளை அன்றாடம் உட்கொள்ள வேண்டும் என தோல் நிபுணர்கள் கூறுகின்றனர்.
9 நாள்கள் முன்னர்
மரண அறிவித்தல்

RAJADURAI
FRANCE (SARCELLES ), BROWN ROAD KALATDI
வயது : 44
இறப்பு : 14 Aug 2025
-
1