ஜலதோஷ பாதிப்பில் இருந்து நிவாரணம் வேண்டுமா?
20 ஐப்பசி 2018 சனி 12:40 | பார்வைகள் : 9475
அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கின்றதா? நீங்கள் கீழ்கண்டவைகளை முறையாய் செய்கின்றீர்களா என்று நீங்களே உங்களை பரிசோதித்துக் கொள்ளுங்கள்.
சாப்பிடும் முன் கை கழுவும் பழக்கம் இன்று எல்லோரிடமும் இருக்கின்றது. ஆனால் அதனை முறையாய் செய்கின்றோமா என்றுதான் கவனிக்க வேண்டும். வலது கையை குழாயின் கீழ் நீட்டி ஒரு நொடியில் ‘நானும் கை சுத்தம் செய்து விட்டேன்’ என்று வருவது கை கழுவாது உண்பதற்கும் சமம். இரு கைகளையும் நீரில் நனைத்து சோப் கொண்டு 20 நொடிகளாவது நன்கு கை, நகங்களை தேய்த்து கழுவுதே கிருமிகளை நீக்கும் முறையாகும்.
இல்லையெனில் கிருமிகள் பாதிப்பு உடனே ஓடி வந்து விடும். இளம் வயதினருக்கு இன்று ஒரு பழக்கம் உள்ளது. செல்போனை தன் தலையணை அருகேயே வைத்திருப்பார்கள். தூக்கத்தில் அவ்வப்போது எழுந்து தன் செல்போனில் வாட்ஸ்அப் செய்திகளை படித்துக் கொண்டும், செய்தி அனுப்பிக் கொண்டும் இருப்பார்கள். இப்படி தூக்கம் கெடுவது அதிக தீய பாதிப்புகளை உடலுக்கு ஏற்படுத்துகின்றது என ஆய்வுகள் கூறுகின்றன. நோய் எதிர்ப்பு சக்தி குறைகின்றது. வெள்ளை அணுக்கள் ரத்தத்தில் குறைகின்றன. அதனால் இவர்கள் எளிதில் வைரஸ் மற்றும் கிருமிகளால் பாதிக்கப்படுகின்றீர்களாம்.
* அதிக மனஉளைச்சல் உங்களை ஆட்கொள்ளாது தவிருங்கள். இவைகளை கவனத்துடன் செய்தாலே வைரஸ், கிருமிகள் தாக்குதலில் இருந்து நம்மை காத்துக் கொள்ள முடியும். கூடவே பொது கைப்பிடிகளில் டிஷ்யூ பேப்பரை கொண்டு உபயோகிப்பதும், கடன் வாங்காததும், கொடுக்காததும் உங்கள் பேனாவினை பயன்படுத்துவதும் கூடுதல் நம்மை பயக்கும்.
* கை குலுக்குவதனைக் காட்டிலும் வணக்கம் சொல்வது சுகாதார வெளிப்பாடும் கூட.
* வேலை செய்யும் டேபிளிலேயே உணவையும் வைத்து சாப்பிடாதீர்கள்.
* அன்றாட காலை இளம் வெய்யில் உடலுக்கு அவசியம்.
* யோகா பழகுங்கள்.
* மூச்சுப் பயிற்சி செய்யுங்கள்.
* காலை உணவை கண்டிப்பாய் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஆக மேற்கூறியவற்றில் முறையான கவனம் கொடுக்கும் பொழுது ஜலதோஷ பாதிப்பு வெகுவாய் குறையும்.
தலைவலி சில சமயங்களில் ஆபத்தானதாகக் கூட இருக்கலாம்.
* மூளைக்கும் அதனை படர்ந்து இருக்கும் மெல்லிய ஜவ்வு படலத்திற்கும் இடையே சில சமயங்களில் ரத்த கசிவு ஏற்படலாம். இதனால் ஏற்படும் தலைவலி ஆபத்தானது.
* உயர் ரத்த அழுத்தத்தினால் ஏற்படும் தலைவலி உடனே கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
* மூளையில் கட்டி.
* மூளையில் கிருமி தாக்குதல் இதனால் ஏற்படும் தலைவலி உடனடி மருத்துவ சிகிச்சை தேவைப்படுவது அவசியம்.
* மண்டைக்குள் நீர் சேர்ந்து மூளை வீக்கம் ஏற்படுதல்.
* விஷவாயு தாக்குதல்.
* மூளையில் ரத்தக் குழாய் உடைந்து ரத்தப் போக்கு ஏற்படுதல்.
இவற்றினால் ஏற்படும் தலைவலியினை உடனடி மிக அவசர சிகிச்சையாக கவனிக்க வேண்டும். இதற்கான அறிகுறிகளை நாம் தெரிந்து கொள்ள வேண்டும்.
* திடீரென ஏற்படும் தாங்க முடியாத தலைவலி.
* எப்பொழுதும் வரும் தலைவலியினைக் காட்டிலும் வித்தியாசமான கடும் தலைவலி.
* தலைவலியுடன் குழறிய பேச்சு, பார்வை மங்குதல், கை, கால் அசைப்பதில் கடினம், மறதி ஏற்படுதல்.
* தலையில் அடிப்பட்டு ஏற்படும் தலைவலி.
* 50 வயதிற்கு மேல் இருந்து ஏற்படும் தலைவலி.
* கண் வலி, கண் சிகப்பு ஒரு கண்ணில் இருந்து ஏற்படும் தலைவலி இப்படிப்பட்ட அறிகுறிகள் இருக்கும் பொழுது உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.
மருத்துவ தந்தை என்று அழைக்கப்படும் ‘ஹிப்போக்ரேட்ஸ்’ பல காலங்களுக்கு முன்னாள் கூறியுள்ள ஒரு மருத்துவ செய்தினை நினைவு கூர்ந்து பார்ப்போம். ‘எல்லா நோய்களும் உணவுப் பாதையிலே ஆரம்பிக்கின்றது’ என்பதுதான். மருத்துவ உலகில் எண் சான் உடம்பிற்கு உணவு பாதையும், ஜீரண உறுப்புகளுமே பிரதானம்’ எனலாம்.
குடலின் உள் சுவரில் மெல்லிய படலம் உள்ளது. இந்த படலம் நல்ல சத்துக்களை உடலுக்குள் செலுத்தி தீய, நச்சுகளை வெளியேற்றி விடுகின்றது. இப்படலத்தில் மிக நுண் துளைகள் ஏற்படும் பொழுது நச்சுகளும் ரத்தத்தில் கலந்து விடுகின்றது. இதனால் உடல் ஆரோக்கியம் பல விதத்தில் பாதிக்கப்படுகின்றது என்பதனை சிலர் நீண்ட ஆய்வுகளின் முடிவாகக் கூறுகின்றனர். சரி இந்த பாதிப்பு ஏன் ஏற்படுவதாகக் கூறப்பட்டுள்ளது?
* பரம்பரை காரணமாக இந்த பாதிப்பு ஏற்படலாம்.
* முறையில்லாத உணவுகள் குடலை பாதிக்கின்றன. நல்ல பாக்டீரியாக்களை அழிக்கின்றன. கெட்ட பாக்டீரியாக்களை பெருக்குகின்றன. குடல் வீக்கத்தினை ஏற்படுத்துகின்றன.
* உணவில் சேர்க்கப்படும் செயற்கை நிறங்கள், குடலுக்கு தீங்கு விளைவிக்கும்.
* மிக அதிக மனஉளைச்சல் ஜீரண மண்டலத்தினையே அதிகம் பாதிக்கின்றது.
* சுத்தமில்லா நீர் காரணமாக இருக்கலாம்.
பொதுவில்
* குடலில் புண் ஏற்பட்டாலோ
* கிருமிகள் தாக்குதலால் வயிற்றுப்போக்கு ஏற்பட்டாலோ
* உடலில் சத்து குறைபாடு இருந்தாலோ
* குடல் வீக்கம் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்பட்டாலோ
* நோய் எதிர்ப்பு சக்தி குறைந்தாலோ
* எடை கூடுதல், நீரிழிவு நோய் 2-ம் பிரிவு என தாக்குத்ல ஏற்பட்டாலோ
முதலில் உங்கள் உணவுப் பாதை, கல்லீரல், பித்தப்பை என உணவு மண்டலத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். இதற்கு உங்கள் மருத்துவர் உதவியினை உடனடி பெறுவது பல்வேறு நோய்களில் இருந்து உங்களைக் காக்கும்.