Paristamil Navigation Paristamil advert login

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோயா

ஹார்மோன் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் சோயா

20 ஆடி 2018 வெள்ளி 12:08 | பார்வைகள் : 11609


 ஆரோக்கியமான இயற்கை உணவுகளே வாழ்நாள் முழுவதும் நமது உடல்நலத்தில் பெரும்பங்கு வகிக்கின்றன. அந்த வகையில் நல்ல உடல் ஆரோக்கியம் தரும் உணவு வகைகளில் ஒன்றாக சோயா புரோட்டீன் உள்ளது என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 
ஏராளமான ஊட்டச்சத்துகளை கொண்ட சோயா பீன்ஸ் மனிதனின் ஆரோக்கியத்தை பாதுகாக்கிறது. இதில் அதிக அளவில் புரோட்டீன், மிதமான அளவில் கொழுப்பு, நார்சத்து, வைட்டமின் பி, ஃபோலிக் அமிலம், பொட்டாசியம், கால்சியம் மற்றும் ஏராளமான இரும்புசத்துக்கள் நிறைந்திருக்கிறது.
 
பல்வேறு வயதில் உள்ளவர்களுக்கும் தேவையான 9 வகை அமினோ அமிலங்களை கொண்டுள்ள புரோட்டீனை வழங்கும் ஒரே தாவர வகை உணவாக சோயா மட்டுமே உள்ளது. பால் பானங்கள் தவிர்க்க விரும்புவோருக்கு சிறந்த ஆரோக்கிய மாற்று பானமாக சோயா புரோட்டீன் உள்ளது.
 
சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதன் முலம் ஹார்மோன் குறைபாடுகளால் உருவாகும் சில வகை புற்றுநோய்களையும் தடுக்க முடியும். மேலும் ஆண்களின் புரோஸ்டேட் சுரப்பிகளின் நலனுக்கும் இது உகந்தது.
 
 
 
உடல் எடையையும், இரத்தத்தில் உள்ள சர்க்கரையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்க நினைப்பவர்களும் சோய்விட்டா-டயாபட்டிக் சிறந்த ஒன்றாகும். ஏனெனில் சர்க்கரை, குளுடென் மற்றும் கெசின் இல்லாததால் தொல்லைகளும் இல்லை.
 
இரத்தத்தில் அதிக கொழுப்புச்சத்து சேருவதே இதய நோய்களுக்கு முக்கிய காரணமாக உள்ளது. சோயா புரோட்டீனில் கொழுப்பு சத்துகள் இல்லாததால் இதயம் சம்பந்தமான ஆபத்தை பெருமளவு குறைக்கிறது.
 
சோயாவில் உள்ள புரோட்டீனானது எலும்பு தேய்மானத்தை தாமதப்படுத்துகிறது. சோயா புரோட்டீனை தொடர்ந்து சாப்பிடுவதால் ஹார்மோன் குறைபாடுகளால் மாதவிடாய் காலங்களில் மகளிருக்கு ஏற்படும் அரிப்பு, இரவில் வியர்த்தல் போன்ற துன்பங்கள் குறையும்.
 

எழுத்துரு விளம்பரங்கள்

வர்த்தக‌ விளம்பரங்கள்